கிழக்கு பட்டதாரிகள் பிரச்சினை தொடர்பில் முதலமைச்சர் ஆளுநர் சந்திப்பு

கிழக்கு மாகாண பட்டதாரிகள் தொடர்பில் பல முக்கிய தீர்மானங்கள் பற்றி கிழக்கு மாகாண ஆளுநரிடம் கலந்துரையாடியதாகம் அவர்களுக்கான நிரந்தர, நியாயமான தீர்வு வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டதாகுவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோவுடனான் சந்திப்பையடுத்தே அவர் இக்கருத்தை வௌியிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், தற்போது பட்டதாரிகளை உள்ளீர்த்தல் பொறிமுறையில் 40 வயதாகவுள்ள வயதெல்லையை 45 வயதுவரை உயர்த்துதல் போன்ற தீர்மானம் தொடர்பில் ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், மாகாணத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் பட்டதாரிகளை உள்ளீர்த்துக் கொள்வதற்கான செயற்பாட்டை விரைவில் முன்னெடுக்க வேண்டும் என ஆளுநரிடம் கோரியுள்ளேன்.

வருடா வருடம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும். இது தொடர்பாக மாகாண சபையில் பிரேரணை ஒன்றை விரைவில் கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக பட்டதாரிகளுக்கு நிரந்தர விடிவு காலத்தை ஏற்படுத்துவதற்கான வழிவகைகளை ஏற்படுத்தவுள்ளதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஆளுநரிம் எடுத்துரைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் நடைபெற்ற சந்திப்பில் கிழக்கு மாகாண ஆளுநர், ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435