கிழக்கு வேலையில்லா பட்டதாரிகளின் நியமனங்களுக்கு அனுமதி

கிழக்கு வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பில் நேற்று (14) இடம்பெற்ற உயர்மட்ட குழுக்கூட்டத்தில் மாகாணத்திலுள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை உள்ளீர்க்க அனுமதி கிடைத்துள்ளது என முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகர் ஆர் பாஸ்கரலிங்கம் தலைமையில் திறைசேரியில் இக்கூட்டம் நடைபெற்றது.

மேலும், கிழக்கு மாகாண முதலமைச்சர், ஒவ்வொரு துறைசார் பட்டதாரிகளையும் அவரவர் துறைசார் ரீதியிலான வெற்றிடங்களுக்கு நிரப்புவதற்கு ஏதுவான யோசனைகளை வழங்குமாறும் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் ஆலோசகர் ஆர் பாஸ்கரலிங்கம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதன் போது கிழக்கு மாகாண ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை உள்ளீர்ப்பது தொடர்பான கட்டமைப்பொன்றை ஒரு கிழமைக்குள் தயாரித்து வழங்குமாறு கல்விப் பணிப்பாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டமைப்பு உருவாக்கப்படும் காலப்பகுதியில் மாகாணத்தில் உள்ள 4703 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு பட்டதாரிகளை எவ்வாறு உள்ளீர்ப்பது என்பது தொடர்பான ​பொறிமுறையை தயாரிக்குமாறும் கிழக்கு மாகாண கல்வியமைச்சுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது,

இதனூடாக மாகாணத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கான முழுமையான வாய்ப்பு கிடைத்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் கூறியுள்ளார்.

அத்துடன் மாகாணத்தில் உள்ள பாடசாலைகள், அரச திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் உள்ள வெற்றிடங்களையும் உடனடியாக நிரப்புவதற்கான அனுமதியும் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதனடிப்படையில் பாடசாலைகளில் நிலவும் 67 ஆய்வுகூட உதவியார்கள், 284 பாடசாலைக் காவலாளிகள்,261 பாடசாலை சிற்றூழியர்கள் மற்றும் 384 சுத்தகரிப்புப் பணியாளர்களுக்கான வெற்றிடங்கள் இதன் போது நிரப்பப்படவுள்ளன.

சுகாதாரத் துறையில் உள்ள 300க்கும் மேற்பட்ட வெற்றிடங்களையும் நிரப்புவதற்கான அனுமதியும் கிடைக்கப் பெற்றுள்ளதுடன் முதலமைச்சரின் கோரிக்கைக்கிணங்க கிண்ணியா பகுதியிலுள்ள வைத்தியசாலையின் குறைபாடுகளை உடனடியாக நிரப்புவதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவுள்ளது.

மற்றும் தேசிய வீடமைப்பு அதிகார சபை உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

அத்துடன் விரைவில் குறித்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு இதன் போது பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு ஏதுவான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளுமாறு முகாமைத்துவ திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்,கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ்,தண்டாயுதபானி,தேசிய கல்வியமைச்சின் செயலாளர்,மாகாண கல்வியமைச்சின் செயலாளர்,கல்விப் பணிப்பாளர்,திறைசேரியின் பிரதிநிதி,தேசிய முகாமைத்துவத் திணைக்களத்தின் பிரதிநிதிகள், தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர்,மாகாண தலைமை செயலாளர் மற்றும் பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆகியோர் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி- தமிழ் வின்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435