கிழக்கு ஆசிரியர் சேவை திறந்த போட்டிப்பரீட்சையில் 390 பேர் சித்தி

கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்காக நடத்தப்பட்ட திறந்த போட்டிப் பரீட்சையில் 390 பேர் சித்தியடைந்துள்ளனர்.

தமிழ் மொழி மூல ஆசிரியர்கள் 292 பேரும் சிங்கள மொழி மூலம் 98 பேருமாக 390 பேர் சித்தியடைந்துள்ளனர் என்றும் புதிய ஆசிரியர் பிரமாணக் குறிப்பின் படி மற்றொரு பிரயோக பரீட்சைக்கு உட்படுத்தப்பட்ட சித்தியடைபவர்கள் ஆசிரியர் சேவை தரம் 3-–1(அ) தரம் 3–-1 (இ) இணைத்துக்கொள்ளப்படுவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

விஞ்ஞானத்துறையில் பரீட்சை எழுதியவர்களில் தமிழ் மொழி மூலம் 116 பேரும் சிங்கள மொழி மூலம் 41 பேரும் சித்தியடைந்துள்ளனர். அவர்களில் 116பேர் மட்டக்களப்பையும் 41 பேர் அம்பாறை மாவட்டத்தையும் சேர்ந்தவர்களாவர்.

தமிழ் மொழி மூல 116 பட்டதாரி பரீட்சார்த்திகளில் 59 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தையும் 37பேர் அம்பாறை மாவட்டத்தையும் 20 பேர் திருகோணமலை மாவட்டத்தையும் சேர்ந்தவர்களாவர்.

கணிதப்பாடத்தில் தமிழ் மொழி மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 35 பேரும் திருகோணமலை மாவடத்தில் 7 பேருமாக 56 பேரும் சிங்கள மொழி மூலம் 10 பேருமாக மொத்தம் 66பேர் தெரிவாகியுள்ளனர்.

ஆங்கில பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகள் 167பேர் தெரிவாகியுள்ளனர். அவர்களில் 120 தமிழ் முஸ்லிம்களும் 47 சிங்களவர்களும் உள்ளடங்கியிருப்பதுடன் இதில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435