குடும்ப வன்முறைக்கு எதிரான சட்ட ஏற்பாடுகளை நீங்கள் அறிவீர்களா?

பால்நிலை என்றால் என்ன? பாலியல் உரிமைகள், பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள், வன்முறைகளில் பாதிக்கப்பட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? என்பன உள்ளிட்ட பால்நிலை சார் உரிமைகள் மற்றும் தகவல்கள் தொடர்பில் பெரும்பாலான பெண்கள் மற்றும் ஆண்களிடையே போதிய புரிந்துணர்வு இல்லாதுள்ளதை அவதானிக்க முடிகிறது.

குறித்த விடயங்கள் தொடர்பாக ஒரு தெளிவுபடுத்தலாக இந்தத் தகவல்கள் அமைகின்றன.

பால் நிலை அடிப்படையிலான வன்முறைகள்

பால்நிலை அடிப்படையில் எந்தவொரு பெண் அல்லது ஆணும் எதிர்கொள்ளும் எந்தவொரு வகையான தொந்தரவும் பால்நிலை அடிப்படையிலான வன்முறை எனப்படும்.
1993 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்ட பெண்களுக்கெதிரான வன்முறையை ஒழிக்கும் உறுதிமொழியானது பாலினம் சார்ந்த வன்முறைக்கு முதலாவது உத்தியோக பூர்வமான வரைவிலக்கணத்தை வழங்கியது.

பால்நிலை

ஒவ்வொரு மனித உயிரும், உயிருடன் வாழ்பவரும் இயற்கையாகவே ஆண் அல்லது பெண் என (பொதுவாக) பிறப்பின்போதே பிரிக்கப்படுகின்றனர். அவ்வாறே நபர் ஒருவரின் பாலியல்பு தீர்மானிக்கப்படுகின்றது. பாலியல்புக்கு அப்பால் ஆண்கள் மற்றும் பெண்கள், சிறப்பம்சங்கள், பண்பாடுகள், வகிபாகங்கள், எதிர்பார்ப்புக்கள், நடத்தை கோலங்கள், மொழி மற்றும் மாறா நிலை என்பவற்றை சமூகம் தூண்டுகின்றது. அதுவே பால்நிலை எனப்படுகின்றது.

1993 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்ட பெண்களுக்கெதிரான வன்முறையை ஒழிக்கும் உறுதிமொழியானது பாலினம் சார்ந்த வன்முறைக்கு முதலாவது உத்தியோக பூர்வமான வரைவிலக்கணத்தை வழங்கியது.

உறுப்புரை 1

• உடலியல் தீங்கு
• பாலியல் தீங்கு
• உளவியல் ரீதியான தீங்கு
• அச்சுறுத்தல்கள்
• வற்புறுத்தல்கள்
• சுயவிருப்பத்துடன் செயல்படும் சுதந்திர இழப்பு

உறுப்புரை 2

– வன்முறை நிகழ்கிறது, குடும்பம், சமுதாயம், மற்றும் அரசிற்குள்ளும் வன்முறை நிகழும்
• அடித்தல் மற்றும் மிரட்டல்.
• சிறுவர்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம்
• வரதட்சணை தொடர்பான வன்முறை
• திருமணத்தின் பின்னான கற்பழிப்பு
• பெண் பிறப்புறுப்பை நீக்குதல் ஃ சிதைத்தல் மற்றும் பெண்களின் வாழ்க்கைக்கு தீங்கு விளைவிக்கும் ஏனைய வழக்காறுசார் நடைமுறைகள்
• பாலியல் வல்லுறவு
• வேலைத்தளத்தில், கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல்
• பாலியல் தொழிலுக்கான ஆட்கடத்தல், கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்தபடுதல்
பெரும்பாலும் பாதிக்கப்படக் கூடிய பெண்கள் (ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்களே மிகவும் பலவீனமானவர்கள்)
• யுத்தம் நடைபெறும் இடத்திலுள்ள பெண்கள்
• சிறுபான்மை சமூகங்களை சார்ந்த மக்கள்
• வயதான பெண்கள்
• இடம்பெயர்ந்த பெண்கள்
• பழங்குடியின பெண்கள்
• அகதிப் பெண்கள்
• புலம்பெயர்ந்த பெண்கள்
• வறுமையின் கீழ் கிராமப்புறங்களிலும், பின்தங்கிய இடங்களிலும் வாழும் பெண்கள்
• தடுப்புக் காவலில் உள்ள பெண்கள்
• மாற்றுத்திறனுடைய பெண்கள்
• குடும்பத் தலைவர்களான பெண்கள்
• அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களான பெண்கள்
• சிறுமியர் 1995ஆம் ஆண்டு பெய்ஜிங் நடவடிக்கைக்கான தளம், பின்வருமாறு நிறைவு செய்தது
• முறைசார் பாலியல் வல்லுறவு
• பாலியல் அடிமைத்தனம்
• கட்டாய கர்ப்பம்
• கட்டாய கருத்தடை
• கட்டாய கருக்கலைப்பு
• கட்டாய கருத்தடை முறைகளை பயன்படுத்தச் செய்தல்
• பிறப்பிற்கு முந்தைய பாலின தேர்வு
• பெண் சிசுக்கொலை

மூன்றில் ஒரு பெண் பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு உட்படுத்தப்பட்டிருப்பார்

• 203 நாடுகளில் 52 நாடுகள் மாத்திரமே திருமணத்தின் பின்னான பாலியல் பலாத்காரத்தினை ஃ வல்லுறவினை தண்டிக்கத்தக்க குற்றமாக பிரகடனப்படுத்தியுள்ளது (இந்த வகை இலங்கையை உள்ளடக்கவில்லை).
• 2.6 பில்லியன் பெண்களும், சிறுமிகளும் திருமணத்தின் பின்னான பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படும் அபாயத்தை கொண்டிருக்கிறார்கள்.
• 4.5 மில்லியன் மக்கள் கட்டாயப் பாலியல் துஷ்பிரயோகத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் அதில் 98மூ பெண்களும் சிறுமிகளும் ஆவர்.

இன்று உலகில் வாழும் 700 மில்லியன் பெண்கள் 18 வயதுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

• மிக இளவயதிலே திருமணம் செய்வதில் ஏழைப்பெண்களுக்கு செல்வந்த பெண்களைவிட 2.5 மடங்கு அதிக சந்தர்ப்பங்கள் உள்ளன.
• தற்காலத்தில் 133 மில்லியன் சிறுமிகளும், பெண்களும் பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
• 2012ம் ஆண்டில், உலகில் கொலையுண்ட பெண்களில் ,இருவரில் ஒருவர் உடனடி வாழ்க்கைத் துணை அல்லது குடும்பத்தினால் கொலைசெய்யப்பட்டுள்ளனர்.

12 பாலியல் உரிமைகள்

• வாழ்வதற்கான உரிமை
• தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் பாதுகாப்புக்கான உரிமை
• பாலியல் மற்றும் இனவிருத்திச் சுகாதாரத்திற்கான உரிமை உள்ளடங்கலாக சுகாதாரத்திற்கான உரிமை
• பிள்ளைகளின் எண்ணிக்கை மற்றம் அவர்களுக்கு இடையிலான வயது இடைவெளியை தீர்மானிக்கும் உரிமை
• திருமணத்திற்கு இணக்கம் தெரிவிக்கும் உரிமை மற்றும் திருமணத்தில் சமவுரிமை
• தனியுரிமை
• சமத்துவத்திற்கு மற்றும் பாரபட்சமின்றி நடத்தப்படுவதற்கான உரிமை
• பெண்கள் மற்றும் சிறுமியருக்கு எதிரான தீங்கு விளைவிக்கும் முயிற்சிகளில் இருந்து சுதந்திரத்திற்கான உரிமை
• சித்திரவதை, மனிதாபிமானமற்ற ரீதியில் அல்லது குரூரமாக நடத்தப்படாதிருப்பதற்கான உரிமை
• பாலியல் மற்றும் பால்நிலைசார் வன்முறையிலிருந்து சுதந்திரத்திற்கான உரிமை

• பாலியல் மற்றும் இனவிருத்திச் சுகாதாரக் கல்வி மற்றும் குடும்பத் திட்டமிடலுக்கான தகவல்கள் கிடைக்கும் சுதந்திரம்
• விஞ்ஞானத்தின் முன்னேற்றத்தை அனுபவிப்பதற்கான உரிமை.

பால் நிலை அடிப்படையிலான வன்முறைகளில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள்

குற்றமிழைத்தவர் மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு இடையிலான அதிகார வேறுபாடே பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கான அடிப்படை காணியாகும். ஏனைய பல்வேறு காரணிகளால் அது அதிகரிக்கக் கூடும்.

சமூக, மத மற்றும் பண்பாட்டு காரணிகள்

• பாதிக்கப்பட்டவர் மீது அதிகாரம் மற்றும் கட்டுப்பாட்டினை பேணல்
• அந்தரங்கமானவை மற்றும் சிறு விடயங்கள் என கருதி பால்நிலை அடிப்படையிலான வன்முறைச் சம்பவங்களை மறைத்தல்
• நெருக்கமான உறவினர் என்பதன் காரணமாக உண்மைகளை மறைத்தல்
• மேன்மை, அதிகாரம் மற்றும் ஆணாதிக்க உளப்பாங்கு
• திருமணம் மற்றும் சீதனம் சார் சமூக எதிர்பார்ப்புகள், நடத்தை மற்றும் வழக்காறுகள்
• புராண நம்பிக்கைகள், வழக்காறுகள் மற்றும் பெண்கள் தொடர்பான உளப்பாங்குகள்
• பாதிக்கப்பட்டவர் மீது குற்றம் சுமத்தல் மற்றும் சமூகக் கூருணர்வு இன்மை
• பால்நிலை மற்றும் சமூகமயமாக்கல்

தனிப்பட்ட பழக்கங்கள் மற்றும் நடத்தைகள்

• அறியாமை, அச்சம் மற்றும் உதவியின்மை
• குடும்பத்தில் சிறுவர் துஷ்பிரயோக அனுபவம்
• மது மற்றும் போதைப் பொருள் பாவனை
• குடும்ப ஒற்றுமையின்மை, முரண்பாடுகள் மற்றும் வன்முறை
• சிறுவர்கள் மீதான புறக்கணிப்பு
• மோசமான மன நிலை
• தனிப்பட்ட உறவுகள் மற்றும் ஆண்கள், பெண்களின் உறவுகளின் எதிர்பார்க்கப்பட்ட வகிபாகங்கள் குறித்த மோசமான புரிந்துணர்வு
• கட்டுப்படுத்த அதிகரித்த அதிகார பயன்பாடு
பொருளாதாரம்
• வறுமை
• பொருளாதார தங்கியிருத்தல் மற்றும் குறைந்த கல்வி மட்டம்
• சம்பள சமச்சீரின்மை, சொத்து உரிமைத்துவம் மற்றும் முகாமைத்துவம்
மக்கள் தொகை
• குடும்ப அளவு
• பாதிக்கப்பட்டவரின் இள வயது
• திருமணத்தின் காலம்
சட்ட-சுகாதார முறைமை
• சட்ட மற்றும் பொலிஸ் அங்கங்களினால் ஒழுங்கற்ற மற்றும் பற்றாக்குறையான நடவடிக்கைகள்
• சட்ட-சுகாதார-பாதுகாப்பு முறைமைகளின் சேவைகள் போதாமை மற்றும் தரத்தில் குறைவாக இருத்தல்
• சட்ட முறைமையில் தாமதம் மற்றும் வெற்றிடங்கள் சூழ்நிலைசார்
• யுத்த நிலைமை
• அடிமைத்தனம்
• குறைந்த வருமானம் மற்றும் தங்கியிருத்தல் நிலைமை

குடும்ப வன்முறை

ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு தரப்பினரும் குடும்ப வன்முறைக்கு உள்ளாகின்றனர். பெரும்பாலும் துன்புறுவது பெண்களேயாகும். 17-22 வீதமான பெண்கள் நெருக்கமான வாழ்க்கைத் துணையின் வன்முறையை எதிர்கொண்டிருப்பதாக இலங்கையில் பல்வேறு துறைகளிலும் குடும்ப வன்முறை குறித்து நடத்தப்பட்ட பல்வேறு கற்கைகள் வெளிப்படுத்துகின்றன.
• பெருந்தோட்டத் துறையில் 7.2 வீதமான பெண்கள் குடும்ப வன்முறையை எதிர்கொள்கின்றனர்.
• மேல் மாகாணத்தில் 60 வீதமான பெண்கள் குடும்ப வன்முறையை எதிர்கொள்கின்றனர்.
• 11 மாவட்டங்களில் 4,004 பெண்களில், 52.2 வீதமான பெண்கள் குடும்ப வன்முறையை எதிர்கொண்டுள்ளனர்.

(கணவர் மற்றும் மனைவியுடன் குடும்ப வன்முறை என்பது முடிவடைந்து விடுவதில்லை. உடல்சார், பாலியல் சார் மற்றும் உளவியல் சார் வன்முறை உள்ளடங்கலாக குடும்ப அமைப்பில் பல்வேறு உறவுகள் மத்தியிலும் அது ஏற்படலாம்).

குடும்ப வன்முறைக்கு எதிரான சட்ட ஏற்பாடுகள்

சிவில் நடைமுறை ஒன்றுக்கான வழியினை 2005ம் ஆண்டு குடும்ப வன்முறையை தடுப்பதற்கான சட்டம் இல 34 வழங்குகின்றது. மத்தியஸ்தம் புரிதலுக்கு அப்பால், குற்றவியல் தவறு நிகழ்ந்திருப்பின், சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். அடித்தல், வல்லுறவு, கடுமையான பாலியல் துஷ்பிரயோகம், பாலியல் தொந்தரவுகள் மற்றும் எந்தவகையான உடல்சார் தீங்கு போன்ற குடும்பச் சூழலில் குறிப்பிட்ட வன்முறைகள், குற்றவியல் தவறுகளாக வகைப்படுத்தப்பட முடியும்.

இந்த சட்டத்தின் கீழ் மேற்குறிப்பிட்ட குற்றங்களுக்காக நீதவான் நீதிமன்றத்திடமிருந்து இடைக்கால தடை உத்தரவினை பாதிக்கப்பட்டவர்கள் பெற முடியும்.
பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் சுரண்டல்

பெண் ஒருவரின் இணக்கமின்றி அவருடன் உறவு கொள்ளும் ஆண் ஒருவர் வல்லுறவின் கீழ் குற்றம் புரிந்தவராவார். சட்டம்சார் பாலியல் வல்லுறவு, பாதுகாவலர் வல்லுறவு, திருமணத்திற்குப் பின்னரான வல்லுறவு மற்றும் கூட்டு வல்லுறவு என்பவற்றின் கீழ் வல்லுறவு நிகழக்கூடும். ஏனைய அனைத்து வன்முறையும் பாலியல் துஷ்பிரயோகத்தின் கீழ் வரும்.
பெண்ணோ, ஆணோ அத்தகைய வன்முறைக்கு உட்படுத்தப்பட முடியும்.

• 18 வயதை அடையும்போது ,லங்கைப் பெண்களில் நான்கில் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டிருப்பார்.
• சிறுவர் நன்னடத்தை, பராமரிப்புத் திணைக்களத்தால் நடாத்தப்படும் பாடசாலையில் கற்கும், பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட மாணவிகளில் 89மூ தம்மை துஷ்பிரயோகம் செய்தவரை அறிந்திருக்கிறார்கள்.
• சிறுவர் நன்னடத்தை, பராமரிப்பு திணைக்களத்தால் நடாத்தப்படும் பாடசாலையில் கற்கும் பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட மாணவிகளில் 30மூ தமது சொந்த வீட்டிலேயே துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
• 2010ஆம் ஆண்டு கொழும்புப்பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஒரு ஆய்வில் பங்கேற்ற 283 பல்கலைக்கழக மாணவிகளில் 60 வீதத்திற்கும் அதிகமானோர் சொந்தவிருப்பமின்றியும், உறவு முறிந்துவிடுமோ என்ற பயத்திலும் பாலியல் உறவுக்கு சம்மதித்துள்ளனர் என்று அறியப்பட்டுள்ளது.

பாலியல் வன்முறையானது பாதிக்கப்பட்டவரின் நல்வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் உடல், உள, மருத்துவ ரீதியான மற்றும் உணர்வு ரீதியான குழப்பங்கள் உட்பட்ட பல்வேறு விதமான மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.

சட்டத்தின் கீழான தண்டனை அத்தகைய குற்றத்திற்கு குற்றமவாளியாக கண்டறியப்படும் ஒருவர் ஐந்து வருடங்களுக்கு குறையாத மற்றும் இருபது வருடங்களுக்கு அதிகரிக்காத சிறைத்தண்டனையை, அபராதத்துடன் அனுபவிக்க வேண்டும்.
(உதாரணமாக, திருமணத்திற்குப் பின்னரான வல்லுறவில், மனைவி அவரிடமிருந்து சட்டரீதியாக பிரிந்தால் மாத்திரமே கணவர் குற்றம் புரிந்தவராக கருதப்படுவார். எவ்வாறாயினும், உள்ளக வன்முறையை தடுத்தல் சட்டத்தின் கீழ் சட்டப்பாதுகாப்பு உள்ளது).

சட்டமுறைப் பலாத்காரம்

• சட்டரீதியாக பாலியல் உறவுக்குச் சம்மதிக்கக்கூடிய ஆரம்ப வயது 16 ஆகும். இவ்வயதிற்குக் குறைந்த நபரோ அல்லது குறைந்த நபருடனோ பாலியல் உறவில் ஈடுபட்டால் அது சட்டவிரோதமானதும், தண்டனைக்கு உட்படுத்தக்கூடிய குற்றமும் ஆகும்.
• இலங்கையில் ஆணோ, பெண்ணோ திருமணம் செய்துகொள்ளக்கூடிய சட்டரீதியான வயது 18 ஆகும்.
• 18 வயதிற்கு கீழ்பட்டோர், பெற்றோரின் அனுமதியைப் பெற்றாலும் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று இலங்கை குடும்ப அமைப்பு சட்டம் தெரிவிக்கிறது.
• 16 வயதுக்குக் குறைந்த பெண்ணோடு பாலியல் உறவில் ஈடுபடுதல் சட்டமுறைப்பாலியல் வல்லுறவாக வரையறுக்கப்படுகிறது. 71 ஆய்வுகளில், 49 ஆய்வுகள் சட்டமுறைப் பலாத்காரம் பற்றியதாக இருந்ததுடன் அதிலும் பெருமளவில் (69% ) 14 – 15 வயதுபிரிவினரே பாதிக்கப்பட்டிருந்தனர் (ச. ஹரிணி அமரசூரியவின் ‘இளவயதுத் திருமணம் மற்றும் சட்டமுறை பலாத்காரம்’ என்ற ஆய்வு)
• ஏறக்குறைய எல்லா சட்டமுறை பலாத்கார நிகழ்வுகளிலும், குற்றவாளி
பாதிக்கப்பட்டவருக்கு தெரிந்தவராகவே இருந்தார் (அப்பா, தாத்தா, மாமா, மாற்றான் தந்தை, அயலவர்) சட்டமுறை பலாத்காரத்தினால் பெண்களின் கல்வி சீர்குலைதல், சமூக, உணர்வு ரீதியான, உளவியல் ரீதியான அழுத்தங்கள், உடலியல், மருத்துவ சிக்கல்கள் என்பவற்றை எதிர்கொள்ள வேண்டி நேரிடுவதோடு அது பதின்வயதுக் கர்ப்பங்களுக்கும் வழிவகுக்கிறது.

வன்முறையைத் தடுப்பதற்கு நீங்கள் என்ன செய்ய முடியும்? நீங்கள் பாதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
• உங்களை குறை கூறிக் கொள்ள வேண்டாம்.
• எந்தவிதமான தொந்தரவையும் எதிர்ப்பதற்கு உங்களுக்கு உரிமை உண்டு.
• உங்கள் விருப்பின்மையை உடனடியாக தெரிவிக்கவும்.
• அத்தகைய செயற்பாட்டில் ஈடுபட வேண்டாம் என குற்றமிழைத்தவருக்கு கூறவும்.
• பொறுப்புள்ள நபருக்கு தெரிவிக்கவும்.
• அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறியத் தரவும்.
• இடம், திகதி மற்றும் நேரத்தின் விளக்கத்துடன் உங்களுக்கு என்ன நடந்தது என்ற குறிப்புக்களை வைத்துக் கொள்ளவும்.

நீங்கள் துஷ்பிரயோகம் நடைபெறும் இடத்திற்கு அருகில் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

•தொந்தரவினை நிரூபிப்பதற்கு உங்களுக்கு ஏதேனும் உடல்சார் ஆதாரம் இருப்பின், அவற்றை காத்து, விசாரணைக்கு சமர்ப்பிக்கவும்.

தொந்தரவின் சாட்சியமாக நீங்கள் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

•அடையாளம் காணல் – சுய நடவடிக்கைகளுடன் .ணைந்திருப்பதற்கு வன்முறையை தடுப்பதற்கு பெரும்பாலானோர் இடையீடு செய்கின்றனர். ஏனெனில், வேறு பல நடவடிக்கைகளும் உள்ளன.

இவற்றின் மத்தியில் சம்பவங்களை அவதானிக்கவும், அடையாளப்படுத்தவும்

•கவனத்தை மாற்றல் – நிகழ்வில் இருந்து பாதிக்கப்பட்டவரின் கவனத்தை திசை திருப்புவதற்கு சம்பந்தமற்ற கேள்வியினை பாதிக்கப்பட்டவரிடம் எழுப்பவும்.
•குற்றத்தை நேரடியாக பிரகடனம் செய்யவும் – குற்றமிழைத்தவரிடம் நேரடியாக அவர் தவறிழைத்துள்ளார் என கூறவும். அவர் என்ன செய்தார் மற்றும் அதன் விளைவுகள் தொடர்பில் குழப்பமடைந்துள்ளதாக விளக்குங்கள்
•ஏனையோரிடமிருந்து உதவி பெறல் – அயலில் உள்ளவர்களுடன் கலந்துரையாடி, பாதுகாப்புக்கான தேவை ஏற்படின் பொலிஸிற்கு தெரிவிக்கவும்.
• தாமதித்தல் – துஷ்பிரயோகச் செயலை அவதானித்தல். சூழலுக்கு ஏற்ற வகையில் பிரதிபலித்தல். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரம் வழங்க இடையீடு செய்தல்.
இடையீடு செய்யும் போது அச்சப்பட வேண்டாம். உங்கள் சொந்த பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தவும். தொந்தரவுக்கு முன்னர், தொந்தரவின் போது மற்றும் அதன் பின்னர் இடையீடு செய்யவும்.
ஐக்கிய நாடுகள் குடித்தொகை நிதியம் (UNFPA)2018 ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கை ஒன்றின் வழங்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை வரையப்பட்டது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435