குவைத்தில் இன்னல் அனுபவித்த 57 பேர் நாடு திரும்பினர்

குவைத் சென்று பணிபுரிந்த வீடுகளில் பல்வேறு கஸ்டங்களை அனுபவித்த 57 இலங்கையர்கள் நேற்று நாடு திரும்பினர்.

நேற்று காலை 6.30 ஶ்ரீலங்கன் விமான சேவையின் யுஎல் 230 விமானத்தில் மூலமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

நாட்டின் பல்வேறு பாகங்களைச் சேர்ந்த அவர்கள், குவைத்துக்கான இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்ததையடுத்து அந்நாட்டு பொலிஸாரினால் விசாரணைகளை மேற்கொண்டு தற்காலிக கடவுச்சீட்டுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நாடு திரும்பியவர்களில் 7 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர் என்றும் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் ஒரு பெண் பணிபுரிந்த வீட்டில் எஜமான் தாக்கியதில் நடக்க முடியாது சக்கரநாற்காலியினூடாக விமானநிலையத்திற்கு வந்தார் என்றும் ஒருவர் பார்வையிழந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435