குவைத்தில் வீட்டு பணியாளர்களாக பணியாற்றுவோருக்கு காப்புறுதி வசதியை ஏற்படுத்தி கொடுக்க அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் ஜுன் மாதம் 3 ஆம் திகதி முதல் இந்த காப்புறுதி திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த காப்புறுதி திட்டமானது வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஊடாக அல்லது சுயமாக குவைத்திற்கு வீட்டு பணியாளர்களாக செல்வோருக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த காப்புறுதி மூலம் குவைத்தில் இலங்கையர்களுக்கு ஏற்படும் விபத்து, நோய் நிலைமை மற்றும் மீள அனுப்பப்படுதல் போன்ற சந்தர்ப்பங்களில் பயன் கிடைக்க பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்துக்கு தொழிலுக்காக செல்லும் பொழுது குவைட்; அலுவலகத்தில் தொழிலுக்கான உடன்படிக்கையை கைச்சாத்திடும் பொழுது இந்த காப்புறுதி அவசியமாகும்.
இந்த காப்புறுதி திட்டமானது தற்பொழுது நடைமுறையில் உள்ள நிவாரண காப்புறுதிக்கு மேலதிகமாக வழங்கப்படும் ஒன்றாகும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.