கூட்டு ஒப்பந்தத்தில் அரச தலையீடு அவசியம்: பிரதமரிடம் வலியுறுத்தல்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்கும் விடயத்தில் அரச தலையீடு முக்கியமானது என ‘ஒருமீ’ என்ற சிவில் சமுக அமைப்புகளின் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பள அதிகரிப்பு தொடர்பில் ‘ஒருமீ’ என்ற சிவில் சமுக அமைப்புகளின் ஒன்றியத்தினால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலத்தில் குறித்த கடிதம் இன்று கையளிக்கப்பட்டது.
அந்தக் கடிதத்தில்,
1984 இல் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவும், 1993இல் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸவும், 1998 இல் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க, சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திருந்தாகவும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போதைய சூழ்நிலையில் கடந்த காலத்தைப் போன்று அரச தலையீடு முக்கியமானது எனத் தாம் கருதுவதாக ஒருமீ அமைப்பு வலியுத்தியுள்ளது.
எனவே, பிரதரும், ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவரும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் தலையிட்டு, தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
முக்கியமாக, தொழிலார்கள் சார்பாக கையொப்பமிடப்படும் கூட்டு ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் என்ன என்பதை அறிந்துகொள்ளும் உரிமை உள்ளது.
எனினும் கூட்டு ஒப்பந்தம் மூடிமறைக்கப்பட்டு வருவதாக ஒருமீ அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும், முதலாளிமார் சம்மேளனமும் ஒப்பந்தத்தில் உள்ளடக்கத்தை தொழிலார்கள் புரிந்துகொள்ளும் மொழியில் அவர்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
அத்துடன், ஒப்பந்தம் தொடர்பான கருத்தறிதலுக்கான போதுமான காலஅவகாசம் வழங்கப்பட்டு, அதன் பின்னர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட அனுமதிக்கமாறு அந்த அமைப்பு பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனநாயக வெற்றியைப் பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றுஞள்ள தாங்களும் தங்களது அரசாங்கமும், தொழிலாளர்களின் ஜனநாயக உரிமையை பாதுகாத்து மலையக தொழிலாளர்களின் அமைதியான வாழ்வுககு உரிய உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்வதாக ஒருமீ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஒருமீ அமைப்பின் முழுமையான கடிதம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435