கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி, பணப்பரிமாற்றம் செய்யப்படும் முறையினூடாக பண மோசடி மற்றும் கப்பம் கோரி மிரட்டி பணம்பறித்தல் போன்ற சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் இது குறித்து பொது மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் பாதுகாப்பு அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திட்டமிட்டு இடம்பெறும் இம்மோசடி செயற்பாட்டிற்கு கையடக்கத் தொலைபேசிகள் பயன்படுத்தப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மோசடிக்காரர்கள் தொலைபேசியினூடாக தொடர்புகொண்டு மிரட்டி தொலைபேசி பணப்பரிமாற்ற முறையை பயன்படுத்தி ரூபா. 25,000 தொடக்கம் ரூபா 50,000 வரையான பணம் மிரட்டிப்பெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
இம்மோசடி தொடர்பாக மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு உங்களுடன் யாராவது ஒரு நபர் தொலைபேசியினூடாக தொடர்புகொண்டு அருகில் உள்ள பொலிஸ் நிலையம் அல்லது 119 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு முறையிட முடியும் என்று அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இச்சந்தேக நபர்களுக்கு எதிராக தமது அமைச்சு கடுமையான நடவடிக்கை என்றும் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.