ஓய்வூதிய கொடுப்பனவு உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகளை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொடுக்க முடியும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கு தேவையான நிதி திறைசேரியிடம் காணப்படுவதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல குறிப்பிட்டுள்ளார்.
ஓய்வூதிய கொடுப்பனவு, விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவு, சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு, சமுர்த்தி, முதியோர் கொடுப்பனவு உள்ளிட்ட கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நன்றி – நியூஸ்ஃபெஸ்ட்