கொரிய மொழித்திறன் பரீட்சைக்கு 22,905 விண்ணப்பங்கள்

கொரிய மொழித்திறன் பரீட்சைக்காக 22,905 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்ற வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

கொரிய மொழி பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கடந்த 14ஆம், 15ஆம் மற்றும் 16ஆம் திகதிகளில் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 19 மத்திய நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இம்முறை தங்காலை பிரதேசத்தில் இருந்து 3,388 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து 5 விண்ணப்பங்கள் மாத்திரமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

தங்காலையில் 3,388 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணத்தில் மொத்தமாக 5 விண்ணப்பங்களே சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

பரீட்சை நடைபெறும் திகதி மற்றும் பரீட்சை நிலையங்கள் தொடர்பான விபரங்கள் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் பணியகத்தின் உத்தியோகப்பூர்வ இணையதளமான http://www.slbfe.lk/ பார்வையிடலாம் என்றும் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435