நிர்வாகத்தை எச்சரிக்கும் டெலிகொம் தொழிற்சங்கம்

ஶ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி 14.11.2019 திகதியிட்டு வௌியிட்ட 58/2019 சுற்றுநிரூபத்திற்கமைய போனஸ் வழங்குவதில் ஏற்பட்டுள்ள பக்கச்சார்பை நீக்குமாறு கோரி டெலிகொம் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தகவல் தொழில்நுட்ப அனைத்து ஊழியர்கள் சங்கம் பிரதான நிறைவேற்று அதிகாரி மற்றும் தொழில் ஆணையாளருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமைய 27.11.2019 அன்று பிரதான நிறைவேற்று அதிகாரிக்கும் தொழிற்சங்கங் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் மேற்குறித்த விடயம் தொடர்பில் அவசியமான நடவடிக்கை எடுப்பதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதற்கு மேலதிகமாக இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவது, 2018ம் ஆண்டுக்கான போனஸ் வழங்கலில் ஏற்பட்டுள்ள அநீதியை நிவர்த்தி செய்யும் பொருட்டு அவ்வாண்டு வழங்கப்பட்ட 25,000 ரூபாவை மீண்டும் 2019ம் ஆண்டில் குறைந்துக்கொள்வது பக்கசார்பான நிலையாகும். டெலிகொம் நிர்வாகத்தினூடாக இதற்கு முன்னர் வழங்கப்பட்ட விசேட போனஸ் கொடுப்பனவை வருடாந்த போனஸ் கொடுப்பனவில் கழிக்க முடியாது. தற்போதைய தலைவரின் நிர்வாகத்தில் இத்தகைய ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளமை கவலைக்குரியது. சில அதிகாரிகள் மில்லியன் ரூபாவரை போனஸ் கொடுப்பனவு பெறும் நிலையில் 17,500 சம்பளம் பெறும் தரத்தில் உள்ள ஊழியர்களின் 1,2ம் காரணங்காட்டி பக்கச்சார்ப்புடன் செயற்படுவதனூடாக மீண்டும் அநீதிக்குள்ளாகின்றனர்.

நாம் கோருவது என்னவென்றால், 2018ம்ஆண்டு வழங்கப்பட்ட போனஸ் கொடுப்பனவு அல்லது 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வழங்கப்பட்ட விசேட போனஸ் தொகையில் கழித்துக்கொள்ள வேண்டாம் என்றும் பிரதான மனிதவள அதிகாரியின் அடிப்படையற்ற உருவாக்கப்பட்ட போலியான சம்பள தரத்தில் நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்கள் பாரிய அநீதிக்கு முகங்கொடுக்கின்றன. இந்நிலையை மாற்றியமைப்பதற்கு போனஸ் தொகையை 150,000 வரை அதிகரிக்கச் செய்யுமாறும் அத்தொகையில் இருந்து ஏப்ரல் மாதம் வழங்கப்பட்ட போனஸ் தொகையை மட்டும் கழித்துக்கொள்ளுமாறும் கோருகின்றோம்.

இந்நிலைமை தொடருமானால் இதற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435