கொரோனாவால் இறந்த புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு காப்புறுதி

​கொவிட் 19 தொற்று காரணமாக இறந்த புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான காப்புறுதி கொடுப்பனவு விரைவில் வழங்கப்படவுள்ளதாக இலங்கை வௌிநாட்டு ​வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

தொழில் நிமித்தம் வௌிநாடுகளுக்குச் சென்ற 35 பேர் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இறந்த அனைவரினதும் குடும்பங்களுக்கு தலா 6 இலட்சம் ரூபா காப்புறுதி வழங்கப்படும் என வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பொது முகாமையாளர் வணிகசேகர தெரிவித்துள்ளார்.

இதுவரை வௌிநாடுகளில் கொரோனாவினால் உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்களின் மரண சான்றிதழ் உட்பட அனைத்து ஆவனங்களையும் வழங்குமாறு அந்தந்த நாடுகளின் துதரங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 10 பேருடைய ஆவணங்கள் கிடைத்துள்ளன என்றும் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435