நாளாந்த கொடுப்பனவு கோரும் தனியார் பஸ் ஊழியர்கள் சங்கம்

கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக பஸ்ஸில் ஏற்றப்படும் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமையினால் பாரிய வருமான பிரச்சினையை எதிர்நோக்கும் தமக்கு கொடுப்பனவு வழங்குமாறு இலங்கை தனியார் பஸ் ஊழியர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பஸ்ஸில் ஏறும் பயணிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளமையினால் பாரிய வருமான பிரச்சினையை எதிர்நோக்குவதாக சுட்டிக்காட்டியுள்ள குறித்த சங்கம் கிலோ மீற்றருக்கு 10 ரூபா வீதம் 45 நாட்களுக்கு தமக்கு கொடுப்பனவொன்றை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தவிர, தென் மாகாணத்தில் மாகாண போக்குவரத்து அதிகாரசபை தவிர்ந்த ஏனைய அதிகாரசபைகளினால் அறவிடப்படும் லொக் அனுமதிப்பத்திரத்திற்கான கட்டணத்தை செப்டெம்பர் மாதம் வரை அறிவிட வேண்டாம் என்றும் வீதி போக்குவரத்து அனுமதிப் பத்திரத்திற்கான கட்டணத்தில் 50 சதவீதத்தை மட்டும் டிசம்பர் மாதம் வரை அறிவிடுமாறும் அச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது,

மேலும் வாகனங்களின் காப்புறுதியை 3 மாதங்களுக்கு நீட்டிக்குமாறும் கடன் வசதிகளை வழங்கும்போது குறைந்த வட்டியில் வழங்குமாறும் அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

பொதுப்போக்குவரத்தில் கொவிட் 19 இரண்டாம் அலை ஏற்படும் அபாயம் காணப்படுவதனால் மாணவர்கள் முடிந்தளவு தனியார் வாகனங்களில் செல்ல வேண்டும் என்றும் சுகாதார அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனால் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவடைந்துள்ளது. நாளொன்று 1000 ரூபா தொடக்கம் 1500 ரூபா வரையான தொகையே மீதமாகிறது. அதிலும் 1000 ரூபா வாகன திருத்தற் செலவுக்கு பயன்படுத்தவேண்டியுள்ளது.

எரிப்பொருள் நிவாரணம் வழங்கப்படுவது நடைமுறைச்சாத்தியமற்றது என்பதனால் கொடுப்பனவாவது வழங்குமாறு தமது சங்கம் ஜனாதிபதி செயலாளர் உட்பட அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

மூலம் – லங்காதீப/ வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435