கொரோனா தொற்றால் நான்காவது நபர் மரணம்

கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் நான்காவது நபர் நேற்று உயிரிழந்தார்.

ஐ.டி.எச் எனப்படும் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தில் 58 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகமான வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று உயிரிழந்த நான்காவது நபர் இரத்மலானை வெடிகந்தையை சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர் தனது மனைவியுடன் அண்மையில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தவர் என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன், அவர் சிகிச்சைக்காக தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களாக 151 பேர் நாட்டி் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களுள், 22 பேர் பூரணமாக குணமடைந்துள்ள நிலையில், 125 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435