இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் கொரோனா நிலவர அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேநேரம், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் நேற்றைய தினம் வரையில் 61 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இந்தநிலையில் 165 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேநேரம், கொரோனாவினால் இலங்கையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் நேற்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அரியாலை தேவாலயத்தில் ஆராதனை நடத்திய போதகருடன் தொடர்பை பேணியவர்களுள் 8 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி – முழங்காவில் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தென்பகுதியை சேர்ந்தவர்களுள் நான்கு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
முன்னதாக வடக்கில் 7 பேருக்கு கொரோனா தொற்றுறதியாகியிருந்த நிலையில், நேற்று 8 பேருக்கு தொற்றுறதியாகியதை அடுத்து வடபகுதியில் நேற்றுவரை 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.