கொரோனா வைரஸ் குறித்து மாணவர்களுக்கான அறிவுறுத்தல்

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பாரிய பீதியை கிளப்பியுள்ள நிலையில் பாடசாலை மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர் மத்தியில் ஏற்பட்டுள்ள பதற்றநிலையை கருத்திற்கொண்டு கல்வியமைச்சு அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது. அவ்வறிக்கை வருமாறு,

சீனாவின் வூஹான் பிரதேசத்தில் ஆரம்பித்து ஏலவே உலகில் பல நாடுகளுக்கு பரவியூள்ள இந்த வைரஸானது இதற்கு முன் நோயை ஏற்படுத்தும் வைரஸாக இனங்காணப்படவில்லை என்பதுடன் 2019 ஆம் ஆண்டு; முதல் இது கொரோனா வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது. நோயின் முக்கிய அறிகுறியானது, காய்ச்சல், இருமல் மற்றும் தொண்டைவலி என குறிப்பிடுவதோடு சுவாசிப்பதற்கு முடியாமை, சுவாசிக்கும் வேகம் அதிகரித்தல் அத்துடன் சிறிதளவில் நியூமோனியா நிலைமையும் ஏற்படக்கூடும் என தொற்றுநோய் பிரிவு தெரிவிக்கின்றது.

  • இந்த நோயில் இருந்து விடுபடுவதற்கு பின்வரும் ஆலோசனைகளை பின்பற்றுவது அவசியம் என சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது
  • கைகளை எந்நேரமும் சுத்தமாக வைத்துக்கொள்ளவூம். இதற்காக கைகளை அடிக்கடி சவர்க்காரத்தினால்; நன்றாக கழுவி சுத்தமாக்கி கொள்ளவும் இதற்காக கிருமிநாசினி (Sanitizer) போன்ற திரவங்களையும் பயன்படுத்தலாம்
  • தும்மல் அல்லது இருமல் ஏற்படும்போது வாய் மற்றும் மூக்கை கைக்குட்டையினால் அல்லது திஷூ கடதாசி கொண்டு, முழங்கையின் உட்பக்கத்தினால் மூடவும்
  •  பாவனைக்குட்படுத்தப்பட்ட திஷூவை பாதுகாப்பாக அகற்றி விடுவதுடன், கைகளையும் கழுவிக்கொள்ளவும்
  • தேவை இல்லாமல் வாய், மூக்கு மற்றும் கண் பகுதிகளைத் தொட வேண்டாம்.
  • தற்போதுள்ள நிலைமைக்கு அமைவாக ஆரோக்கியமான பாடசாலை பிள்ளைகள் பாடசாலைக்கு வருகை தரும்போது நாள்தோறும் முகக்கவசங்களை அணிவது அவசியமாகாது

தொற்று நோயாளிகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பாக சுகாதார அமைச்சினாலும் விசேட ஆலோசனை கையேடு ஒன்று வெயிடப்பட்டுள்ளது. தீவர சுவாச நோய்களுக்குள்ளான நோயாளிகளுடன் நெருங்கி பழகுவதை இயலுமானவரையில் தவிர்க்கும்படியும், அவ்வாறான நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும்போது கைகளை நன்றாக சுத்தம் செய்துக்கொள்வதுடன் காட்டுப் பிராணிகளையும் இறந்த அல்லது தொற்றுநோயுக்குட்பட்ட மிருகங்களை தொடுவதை தவிர்க்கும்படியும், காய்ச்சல், இருமல் தொண்டைவலி இருக்குமாயின் முகக்கவசங்களை அணியவேண்டியதுடன், உடனே வைத்திய ஆலோசனை பெறுவது அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இது குறித்து ஏதேனும் ஒரு பாடசாலைக்கு மேலதிக ஆலோசனைகள் அல்லது தகவல் தேவைப்படுமாயின் அந்த பாடசாலைக்கு அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திலோ அல்லது கல்வி அமைச்சின் சுகாதார மற்றும் போஷாக்கு கிளையின் 0112784872/ 012784163 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறு கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துக்கொள்கின்றது

ஊடகப் பிரிவு
கல்வி அமைச்சு

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435