கொழும்பில் திரண்ட அதிபர்-ஆசிரியர்கள்

ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க ஒன்றியத்தின் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் இன்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.

நேற்றைய தினம் நாடாளாவிரீதியில் இந்த சுகயீன விடுமுறை போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் காரணமாக நாடுமுழுவதும் பெருமளவான பாடசாலைகளின் கற்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், கொழும்பில் நேற்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கொழும்பு – கோட்டையில் ஆரம்பமான எதிர்ப்புப் பேரணியில், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள் பங்கேற்றிருந்தன.

அவர்கள் லோட்டஸ் வீதி ஊடாக ஜனாதிபதி செயலகம் நோக்கி பயணிக்க முயன்ற போதிலும், அதற்கான சந்தர்ப்பம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் சிலருக்கு மாத்திரம் ஜனாதிபதி செயலகத்திற்குள் செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

ஜனாதிபதி செயலாளருடன் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்குவதாக பொலிஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்த போதும், உதவி செயலாளரையே சந்திப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை எனவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் அடுத்த வாரத்திற்குள் உறுதியான முடிவு தராத பட்சத்தில், 5 நாட்களுக்கு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தொழிற்சங்கள் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435