
ஒவ்வொரு ஆண்டும், உலகெங்கிலும் உள்ள முக்கியமான கட்டிடங்கள் செம்மஞ்சள் நிறத்தில் ஒளிரும் ‘பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான செயல்பாட்டின் 16 நாட்கள்’, இது உலகளாவிய பிரசாரமாக நவம்பர் 25 முதல் (பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச நாள்) டிசம்பர் 10 வரை தொடங்குகிறது (மனித உரிமைகள் நாள்). இந்த 16 நாட்களில், அரசாங்கங்கள், ஐ.நா. முகவர் நிலையங்கள், சிவில் சமூகம் மற்றும் ஆர்வலர்கள் ஒன்றிணைந்து இந்த பிரச்சினையில் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றதாக ஐக்கிய நாடுகளின் குடித்தொகை நிதியம் (UNFPA) தெரிவித்தள்ளது. இது தொடர்பில் நேற்று முன்தினம் (25) வெளியிட்ட அறிக்கையில் அந்த நிதியம் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கொவிட்-19 உலகைப் பாதிக்கும் முன்பே, பாலின அடிப்படையிலான வன்முறை ஏற்கனவே மிகப்பெரிய மனித உரிமை மீறல்களில் ஒன்றாகும். இருப்பினும், வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக உலகம் முழுவதும் முடக்கநிலை விதிக்கப்பட்டிருந்தாலும், இது மற்றொரு கொடிய தொற்றுநோயையும் மேற்பரப்பில் கொண்டு வந்தது – பாலின அடிப்படையிலான வன்முறையின் நிழல் தொற்றுநோய், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான தற்போதைய ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. வீட்டு வன்முறையை அனுபவிக்கும் எண்ணற்ற பெண்கள், திடீரென்று தங்களது குற்றவாளிகளுடன் வீட்டிலேயே அடைத்து வைக்கப்பட்டனர். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு இந்த சேவைகள் மிகவும் தேவைப்படும் நேரத்தில், உயிர் காக்கும் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகளுக்கான அணுகலை இது கடுமையாக பாதித்துள்ளது மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு பதிலளிக்கும் அதிகாரிகளின் திறனை தடை செய்கிறது.
கொவிட்-19 க்கு பதிலளிப்பதில் சுகாதார அமைப்புகள் நீடிக்கப்பட்ட நிலையில், உதவி கோருபவர்களால் தேசிய உதவி மற்றும் உடனடி அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்ததன். இருப்பினும் இது பனிப்பாறையின் முனை மட்டுமே, ஏனெனில் பயம் மற்றும் களங்கம் காரணமாக பல சம்பவங்கள் பதிவு செய்யப்படவில்லை.
தொற்றுநோய் தொடர்கையில், இந்த எண்ணிக்கை பெண்களின் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு, அவர்களின் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் இனப்பெருக்க உரிமைகள் மற்றும் இந்த நெருக்கடியை மீட்பதில் பங்கேற்கும் திறன் ஆகியவற்றில் பல தாக்கங்களுடன் வளர வாய்ப்புள்ளது.
இந்த 16 நாட்கள், கொவிட்-19 இன் போது பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பிப்பிழைத்தவர்களுக்கு ஒற்றுமையுடன், இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆதரவுடன் ஐக்கிய நாடுகளின் குடித்தொகை நியதித்தின் இலங்கை பணிமனை, ‘செம்மஞ்சள் உலக பிரச்சாரத்தில்’ (‘Orange the World campaign). இந்த நிழல் தொற்றுநோயை வெளிச்சமிட்டுக்காட்ட ‘தாமரை கோபுரம்’ செம்மஞ்சள் நிறத்தில் மின்விளக்குகளால் ஒளிரச் செய்யப்பட்டது.
அனைவருக்கும் பாதுகாப்பான உலகத்தை உருவாக்க முயற்சிக்கும் முன்னணி சுகாதார ஊழியர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கு கௌரவம் செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகும், அதே நேரத்தில் தொற்றுநோய்களுக்கு மத்தியிலும் இந்த பிரச்சினைக்கு முன்னுரிமை அளிக்க கொள்கை வகுப்பாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். ஏனெனில், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஒரு வீடு பாதுகாப்பாக இல்லாவிட்டால் உலகம் வளர்ச்சிபெற முடியாது. எவரையும் கைவிட்டுவிடாத எங்கள் உறுதிப்பாட்டின் முக்கிய பகுதி இது என்று ஐக்கிய நாடுகளின் குடித்தொகை நிதியம் தெரிவித்துள்ளது.