கொவிட் 19 தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தொடர்பு கொண்டு அறிவிக்க 1390 என்ற உடனடி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
டயலொக் எக்ஸிஸ்ட்டா ஊடாக இச்சேவை வழங்கப்படுவதாக தெரண தொலைகாட்சியில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எங்கும் அலையத் தேவையில்லை. குறித்த எண்ணில் தொடர்புகொண்டால் உரிய ஆலோசனை வழங்கப்படுவதுடன் சிகிச்சைக்கு செல்லக்கூடிய அருகிலுள்ள மருத்துவமனையையும் தெரிவிப்பார்கள். கோல் சென்ரர் ஊடாக1990 என்ற எண்ணுடன் தொடரபுகொண்டு சுவசெரிய அம்புலன்ஸ் வரவலைத்து தொற்று உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியும்.
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஒரே இரவில் 166 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன. நேற்று (05) தனிமைப்படுத்தல் முகாமில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.