கொவிட் 19 – கவனயீனமாக இருக்காதீர்கள்!

​கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 106 என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் 500 ஆக இருக்கலாம் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அச்சம் வௌியிட்டுள்ளது.

மக்கள் கவனயீனமாக இருக்கக்கூடாது என்று தேசிய நாளிதழான த ஐலண்ட் பத்திரிகையில் கருத்து வௌியிட்டுள்ள வைத்தியர் அளுத்கே, ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் மக்கள் உரிய தூரத்தை கடைப்பிடிக்க முடியாது தடுமாறுகின்றனர். இது மேலும் தொற்றை உருவாக்க ஏதுவாகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“ஏப்ரல் 08 க்குள் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. தற்போது மருத்துவமனையில் உள்ள COVID-19 நோயாளிகளுடன் சுமார் 19 000 பேர் உடல் ரீதியான தொடர்புக்கு வந்திருந்தனர், இந்த நபர்கள் அதிகாரிகளால் கண்காணிக்கப்படுகிறார்கள். மக்கள் வழிமுறைகளை சரியாகப் பின்பற்றினால், இரண்டு வாரங்களுக்குள் ஒரு நேர்மறையான முடிவை எதிர்பார்க்கலாம் ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435