குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் தமது நாடுகளில் அனுமதியின்றி தங்கியுள்ள வெளிநாட்டு பணியாளர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்புவதற்கான பொது மன்னிப்புக் காலத்தை அறிவித்துள்ளது.
நேற்று (01) தொடக்கம் எதிர்வரும் 30ம் திகதி வரை இக்காலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
கொரோனா தொற்றினால் உலக நாடுகள் தமது சர்வதேச போக்குவரத்து தொடர்புகளை முற்றாக துண்டித்துள்ள இச்சந்தர்ப்பத்தில் இப்பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குவதை் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளும் தமது விமான போக்குவரத்தை முற்றாக இடைநிறுத்தியுள்ளது.
தற்போது அடையாளங்காணப்பட்டுள்ள இலங்கையர்கள் சுமார் 40 இடைத்தங்கல் முகாம்கள் மற்றும் 140 பாதுகாப்பு இல்லங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் இதில் உள்ளடங்குவதாகவும் அவர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் திருப்பி அனுப்ப அந்நாடுகளுக்கான இலங்கை தூதரகங்கள் எதிர்பார்ப்பதாகவும் தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமூக வலைத்தளங்களான வட்ஸப் மற்றும் வைபர் ஊடாக தகவல்களை அனுப்பு பயண ஆவணங்களை ஏற்பாடு பொது மன்னிப்பு காலம் நிறைவடைவதற்குள் செய்துகொள்ளுமாறு லெபனான் மற்றும் குவைத்தில் உள்ள இலங்கை தூதரங்கள் குறித்த இலங்கையர்களுக்கு அறிவித்துள்ளன. பல தடவைகள் மக்கள் துதரகம் நோக்கி வருகை தருவதை தவிர்ப்பதற்காக இம்முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
இப்பொது மன்னிப்பு காலப்பகுதியில் பதவின்றி இருக்கும் வௌிநாட்டுத் தொழிலாளர்களுக்கு பயண டிக்கட் மற்றும் ஆவணங்கள் பெறும் முறையை குவைத் இலகுபடுத்தியுள்ளது.
இந்நிலையில் தங்குவதற்கு உரிய ஆவணங்கள் உள்ள இலங்கையர்களும் தமது ஆவணங்களை கோரி தொடர்பு கொள்வதாகவும், அவர்களை இருக்குமிடங்களில் பாதுகாப்பாக இருக்குமாறும் இப்போது நாடு திரும்ப முயற்சிக்க வேண்டாம் என்றும் தூதரகங்கள் அறிவுறுத்தியுள்ளன.