கோவிட்-19: தொழில்துறை பாதிப்புகளை ஆராய்ந்து தீர்வுகளை முன்வைக்க குழு

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டின் தொழில் துறைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் ஆராய்ந்து அவற்றைத் தடுக்கும் வகையில் தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கான விசேட குழு ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டின் தொழில் துறைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளிலிருந்து அவற்றை பாதுகாப்பது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக வெளிவிவகார அமைச்சரும், தொழில் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தலைமையில், நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்ற விசேட பேச்சுவார்த்தையொன்று தொழில் அமைச்சில் நேற்று நடைபெற்றது.

இப்பேச்சுவார்த்தையின்போது கொரோனா வைரசினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் தொடர்பிலும் அதற்கான தீர்வை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன, நாட்டை கொரோனா வைரசிலிருந்து மீட்டெடுப்பதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைள் தொடர்பில்  நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தினார்.

கொரோனா வைரஸ் காரணமாக எதிர்கொள்ளக்கூடிய சில நெருக்கடிகள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டன.

குறிப்பாக நிறுவனங்களில் தொழில் புரியும் ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களின் வருமானம் வெகுவாக குறைதல், ஊழியர்களுக்கு வழங்கப்படும் மேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் ஊக்குவிப்புக் கொடுப்பனவு தொழில் பாதுகாப்பு, உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு தேவையான மூலப் பொருட்களை பெற்றுக்கொள்ளுதல் என்பன தொடர்பில் ஆராயப்பட்டன.

உற்பத்தித்துறைக்கான பெரும்பாலான மூலப் பொருட்கள் சீனாவிலிருந்தே கொள்வனவு செய்யப்படுவதால் சிக்கல்கள் மேலும் உக்கிரமடையலாம் என்பது தொடர்பிலும் கலந்துரையாப்பட்டது.

மூலம் : தினகரன்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435