மக்கள் கூடுவதை தவிர்த்து வீட்டில் இருக்க வேண்டும் என்ற நோக்கிலேயே பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மக்கள் வீடுகளில் இருப்பது கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதுடன் பரவுவதையும் தடுக்கும்.
இவ்வூரடங்குச் சட்டக் காலப்பகுதியில் தமக்கு கொவிட் 19 தொற்று உள்ளதாக சந்தேகிப்பவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபட ஏதுவாக அமையும் என்று சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பிரிவின் பிரதான பணிப்பாளர் டொக்டர் பபா பலியவடன சுட்டிக்காட்டியுள்ளார்.T
நேற்று (20) மாலை 6.00 தொடக்கம் எதிர்வரும் 23ம் திகதி திங்கட் கிழமை காலை 6.00 மணி பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொவிட் 19 தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாட்டினுல் பொழுதுபோக்கு சுற்றுப்பயணங்கள், வணக்கஸ்தலங்களுக்கு விஜயம் செய்தல் மற்றும் ஏனைய சுற்றுலா விடயங்களில் ஈடுபடுவது மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.