இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளைச் சார்ந்த மக்களில் பலர் வேலைவாய்ப்பு நாடி மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்கின்றனர். முன்னர் நாட்டிற்கு ஏற்றுமதி வருமானத்தை பெற்றுத் தந்த தேயிலை, தென்னை றப்பர் போன்ற உற்பத்திப் பொருட்களையெல்லாம் பின்தள்ளி இன்று நாட்டிற்கு அதிக வருமானத்தையும் இவ்வௌிநாட்டு தொழில்வாய்ப்பு பெற்றுத் தருகிறது.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் இன்று உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் வைரஸ் தொற்றான கொவிட் 19 மத்திய கிழக்கு நாடுகளை மட்டும் விட்டுவைக்குமா என்ன? இல்லை… இன்று முடங்கிப் போயுள்ள பல நாடுகளில் மத்திய கிழக்கு நாடுகளும் உள்ளடங்குகின்றன.
மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர் பணியாற்றுகின்றனர். விமான போக்குவரத்துகள் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் தொழில் தருநர்களின் சட்ட திட்டங்களுக்கமைய தத்தமது தங்குமிடங்களிலேயே முடங்கிப் போயுள்ளனர் புலம்பெயர் தொழிலாளர். இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்பில் இவ்விக்கட்டான நேரத்தில் எத்தகைய நடவடிக்கைளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என்பது குறித்து சற்று ஆராய்ந்து பார்ப்போம்.
பொதுவாக ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதிகள் இன்று வெறிச்சோடிப்போயுள்ளன. வீட்டுக்குத் தேவையான பொருட்களை நான் மட்டுமே சென்று வாங்கி வருகிறேன். மனைவியையும் பிள்ளையையும் வௌியில் அழைத்துச் செல்லவதே இல்லை. இதனால் அவர்களும் சற்று பாதிக்கப்பட்டேயுள்ளனர். ஆனால் பாதுகாப்பு முக்கியம் தானே என்கிறார் ஐக்கிய அரபு இராச்சியத்தில் தனியார் நிறுவனமொன்றில் கணக்காளராக பணியாற்றும் தயாகர்.
சுமார் மூன்றாண்டுகளுக்கு மேலாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் கணக்களாராக பணியாற்றும் அவர், தொடர்ந்து கருத்து வௌியிடுகையில்,.
உலகம் முழுக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸின் தாக்கம், எண்ணெய் வளம் அதிகமுள்ள வளைகுடா நாடுகளையும் விட்டு வைக்கவில்லை. வளைகுடா நாடுகளில் அதிக அளவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் வேலை செய்து வருவதால், அந்த நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் எப்படி உள்ளது? என்பதை அறிந்து கொள்ள மக்கள் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர்.
தற்போதைய சூழலில் பெரும்பாலான வளைகுடா நாடுகள், தேசிய அளவிலான ஊடரங்கை பிறப்பிக்கவில்லை என்றாலும் பகுதி நேரமாக குறிப்பாக இரவு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி வருகின்றன. கொரோனா அச்சம் காரணமாக ஏற்கனவே மசகு எண்ணெய் தேவை குறைந்து வருவது, உள்நாட்டு வர்த்தக நடவடிக்கைகளைக் குறைத்துள்ளது ஆகியவற்றினால் அடுத்து வரும் மாதங்களில் பொருளாதார ரீதியான தாக்கத்தை வளைகுடா நாடுகள் சந்திக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு வளைகுடா நாடுகளும் தப்பவில்லை. சவுதி அரேபியா தொடங்கி கட்டார் வரை அனைத்து வளைகுடா நாடுகளிலும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வளைகுடா நாடுகளில் விமான சேவைகளுக்கு தடைவிதிக்கப்படிருப்பதால் அந்த நாடுகளில் பணியாற்றி வரும் வௌிநாட்டு பணியாளர்கள் தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதனால் அந்த நாடுகளில் என்ன சூழல் நிலவிவருகின்றது. அங்கு கொரோனா பரவல் எப்படி இருக்கின்றது என தொழிலாளர்களின் குடும்பத்தினரும் குழம்பி வருகின்றனர்.
இது தொடர்பாக வளைகுடா நாடுகளில் தற்போதைய நிலை தொடர்பில் அவதானிக்கலாம்.
சௌதி அரேபியா
வளைகுடா நாடுகளில் ஈரானைத் தவிர கொரேனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக சௌதி அரேபியா காணப்படுகின்றது.
யான் ஆப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வுகளின் படி தற்போதுவரை சௌதி அரேபியாவில் சுமார் 2700 பேர் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். 38 பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை ஒரே நாளில் நான்கு பேர் கொரோனாவால் மரணமடைந்ததைத் தொடர்ந்து சௌதியில் கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியான தலைநகர் ரியாத், யெட்டா, தம்மாம் உள்ளிட்ட 7 பெரிய நகரங்களில் 24 மணிநேர ஊரடங்கு நிலை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நகரங்களிலிருந்து யாரும் வௌியேறவோ அல்லது உள்நூழையவோ
அனுமதி கிடையாது. அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் காலை 6 மணிமுதல் மாலை 3.00 மணிவரை வௌியேறலாம். கொரோன தடுப்பு நடவடிக்கை காரணமாக சௌதியில் செயற்படும் தனியார் நிறுவனங்களின் வர்த்தக நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அந்நிறுவனங்கள் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசுக்கு சுட்டிக்காட்டியுள்ளன.
இதனை தொடர்ந்த அந்த நிறுவனங்கள் தொழிலாளர்களின் ஊதியத்தையும் வேலை நேரத்தையும் குறைக்க சௌதி அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் இந்த ஊதியக்குறைப்பு பணியாளர்களின் சம்மதத்துடன் நடைபெற வேண்டும் எனவும் எவ்வளவு சம்பளம்
குறைக்கப்படுகின்றதோ அதே அளவுக்கு துல்லியமாக வேலை நேரமும்
குறைக்கப்பட வேண்டும் என சௌதியின் மனிதவளம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாக அராப் செய்தித் தளம் தகவல் வௌியிட்டுள்ளது. அத்துடன் இந்த விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது பணியாளர்கள் அரசு இணையத்தளத்தில் புகார் அளிக்கலாம் எனவும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம்
இங்கு தற்போதுவரை சுமார் 1800 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் 11 பேர் மரணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக அந்நாட்டில் 277 பேருக்கு கொரோன இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த நாட்டில் கொரோன பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அந்நாடு முடிவு செய்துள்ளது.
குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. தலைநகர் அபுதாபியில் உள்ள குடியிருப்புப்பகுதிகளில் இரவு 9.00 மணிமுதல் காலை 6.00 மணிவரையும் தொழிற்சாலைப் பகுதிகளில் மாலை 6.00 மணிமுதல் மறுநாள் காலை 6.00 மணிவரையும் சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரங்களில் பொதுமக்கள் யாரும் வௌியே வரவேண்டாம் எனவும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
டுபாயைப் பொறுத்தவரையில் அந்த நகரில் 24 மணிநேர முடக்க நிலை அடுத்த இரண்டு வாரங்களுக்கு அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டுபாயில் வேலை இடங்களுக்கு தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துக்கள் அவற்றின் இருக்கைகளில் பாதி அளவுக்கு மட்டுமே தொழிலாளர்களை ஏற்றிச் செல்லவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்நகரின் வர்த்தக நடவடிக்கைகளும் ஏப்ரல் 18 ஆம் திகதிவரை நிறுத்தப்படுவதாக டுபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த சனிக்கிழமை முதல் 24 மணிநேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டைவிட்டு வௌியே வரவேண்டும் என்றாலும் முதலில் டுபாய் காவல் துறையினரிடம் அனுமதி பெறவேண்டும் இதனை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எமிரேட்ஸ் விமான சேவை குறிப்பிட்ட வழித்தடங்கலில் மட்டும் பயணிகள் விமான சேவையைத் தொடங்கியுள்ளது. நேற்றுக் காலை டுபாயிலிருந்து புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம் ஒன்று ஜேர்மனியின் பிராங்பேட் விமான நிலையத்தை அடைந்தது.
கட்டார்
கட்டாரில் தற்போதுவரை சுமார் 1800 பேர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் கல்ப் இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது. ஏப்ரல் 6 ஆம் திகதி மட்டும் 228 பேருக்கு புதிதாக கட்டாரில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.
மேலும் தினசரி வேலை நேரம் 6 மணித்தியாலங்களாக குறைக்கப்படுவதாகவும் வேலை இடங்களிலிருந்து வௌியேற அல்லது உள்ளேவர கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் வேலை இடங்களுக்கு பணியாளர்களை அழைத்துச் செல்லும் பேருந்துக்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டும் நிரப்பப்பட வேண்டும் எனவும் தொழிற்துறை அமைச்சகம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
டஜன் கணக்கான கொரோனா நோயாளர்கள் கண்டறியப்பட்டதை அடுத்து மூடப்பட்ட கைத்தொழில் பேட்டைகள் தொடர்ந்தும் மூடியே இருக்கும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஓமான்
வளைகுடா நாடான ஓமானில் தற்போதுவரை 371 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் தலைநகர் மஸ்கெட்டைச் சேர்ந்தவர்கள். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 40 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குவைத்
குவைத்தில் தற்போதுவரை 637 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் மரணமடைந்துள்ளார். சுமார் 2500 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த மாதத் தொடக்கத்திலிருந்து குவைத்தில் புதிய கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அந்நாடு பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக அந்நாட்டின் லீக் அல்சுயூப் மற்றும் மஹ்பல்லா ஆகிய இரண்டு மாவட்டங்களில் வரும் ஏப்ரல் 26 ஆம் திகதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாவட்டங்களும் வௌிநாட்டு பணியாளர்கள் அதிகம் தங்கி இருக்கும் பகுதியாகும். கொரோனாவால் பதிக்கப்பட்டவர்களின் பெரும்பாலானவர்கள் வௌிநாட்டு பணியாளர்கள் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அராபியன் பிஸ்னஸ் இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது. இதுதவிர நாட்டில் பல பகுதிகளில் 2 மணிநேரம் கடைப்பிடிக்கப்பட்டுவந்த ஊரடங்கு நிலை மாலை 5 மணிமுதல் மறுநாள் காலை 6 மணிவரை என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எந்தத் திகதிவரை இந்த ஊரடங்கு நிலை என குறிப்பிடப்படவில்லை.
பஹ்ரைன்
பஹ்ரைனை பொறுத்தவரை 294 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. 4 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 4 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். பஹ்ரைனில் கண்டறியப்பட்ட பொரும்பாலான கொரோனா தொற்று ஈரானுடன் தொடர்புடையது என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளதால், பஹ்ரைன் விமான நிலையில் சர்வதேச விமான பயணிகள் ரான்சிற் வசதியினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் ஆனால் நாட்டுக்குள் வர வௌிநாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் எனவும் அந்நாடு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை பஹ்ரைன் அரசருடன் தொலைபேசி மூலமாக பேசிய இந்தியப் பிரதமர் மோடி, அங்கிருக்கும் இந்தியர்களின் நலனை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். பஹ்ரைனில் மட்டும் சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் இந்தியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி- பிபிஸி