புதிதாக பட்டதாரி நியமனங்கள் பெறும் மகளீருக்கு 6 வாரங்கள் பிரசவ விடுமுறை வழங்கப்படும் என அவர்களுடைய நியமனக்கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அரச நிர்வாக, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
குறித்த 8 வாரங்களுக்கு மேலதிகமாக விடுமுறைகளை பெறுவோருடைய சம்பளத்தில் குறிப்பிட்ட தொகை குறைக்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் அமைச்சரவை தீர்மானத்தினூடாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு அவர்களுடைய நியமனக்கடிதங்களில் குறிப்பிடப்பட்ட பிரசவ விடுமுறைக்கு மேலதிகமாக வெவ்வேறு சலுகைகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அமைச்சரவை அனுமதிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதற்கமைய அரச நிர்வாக சுற்றுநிரூபத்தில் 9 மாத பயிற்சி காலத்தை பூர்த்தி செய்தவர்களுக்கு முழுமையான சம்பளத்துடன் 84 நாட்கள் விடுமுறை வழங்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.