க.பொத உயர்தர/ சான்றிதழ் பிரச்சினையிருப்பினும் ஆசிரியராகலாம்

ஆசிரியர் சேவையில் இணைந்துகொண்ட ஒருவருடைய க.பொ.த உயர்தரம் அல்லது சாதாரணதர தர பெறுபேறுகளில் குளறுபடிகள் இருப்பின் அவர்களுடைய பயிற்சி கலாசாலை பயிற்சி சான்றிதழை அடிப்படை தகமையாக கொள்ள முடியும் என்று அரச சேவை ஆணைக்குழுவின் கல்விச் சேவைக் குழு தெரிவித்துள்ளது.

ஆசிரியர் சேவைக்கான அடிப்படை தகைமையாக கொள்ளப்படும் மேற்படி தகமைகளை ஏதாவது ஒரு காரணத்திற்காக தவறாக பயன்படுத்தப்பட்டமை தெரியவந்து அவரை பணிநீக்கம் செய்யவேண்டிய நிலை ஏற்படும். அவர்கள் பயிற்சிக் கலாசாலை அல்லது தொலைகல்வி மூலமாக பயிற்சியை பூர்த்தி செய்திருந்தால் பூர்த்தி செய்திருந்தால் அச்சான்றிதழ் செல்லுபடியாகும் தினத்தில் இருந்து அவரை ஆசிரியராக கணிப்பிட முடியும் என்று கல்விச் சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இச்சான்றிதழை அடிப்படையாக வைத்து ஆசிரியர்களை சேவையில் உள்ளீர்க்கலாம் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435