சகல பெருந்தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 5000 ரூபாய் நிவாரண கொடுப்பனவு வழங்கும் பணிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
ஆனால், அந்தக் கொடுப்பனவு தங்களுக்கு கிடைக்கவில்லை என பெரும்பாலான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தாங்கள் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், அரசாங்கத்தின் கொடுப்பனவு தங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை என்றும், இதனால் தங்களுடைய வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதில் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மே மாதத்திற்கான கொடுப்பனவு வழங்கும் பணிகளை அரசாங்கம் நேற்று முதல் ஆரம்பித்துள்ளது.
இதன்படி, அனைத்து பெருந்தோட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் இந்த ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம் பேஸ்புக் பக்கத்தின் ஊடாக பிரசாரம் ஒன்றை மேற்கொள்கின்றது.
“சகல தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கும் 5000/- கொடுப்பனவை வழங்கு!
සියලු වතු කම්කරු පවුල්වලට රු.5000/= දීමනාව ලබා දෙනු!”
என்ற பிரச்சாரத்தை தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம் முன்னெடுத்து உள்ளது.