சமுர்த்தி, ஆசிரியர் முகாமைத்துவ சேவையில் வடக்கு கிழக்கு பட்டதாரிகள்

வடக்கு கிழக்கில் உள்ள பட்டதாரிகள் எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் சமுர்த்தி, ஆசிரியர் சேவை, அரச முகாமைத்துவம் ஆகிய சேவைகளுக்குள் உள்ளீர்க்கப்படுவர் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

சபை ஒத்திவைப்பு வேளையில் எதிர்கட்சித் தலைவர் முன்வைத்த பிரேணைக்கமைய நேற்றுமுன்தினம் பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையிலேயே அரசாங்கம் இவ்வுறுதி மொழியை வழங்கியுள்ளது.

இவ்விவாதத்தின் போது அரசாங்கத்தின் சார்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர்களான ரஞ்சித் மத்துமபண்டார, சாகல ரத்நாயக்க மற்றும் இராஜாங்கம் அமைச்சர் நிரோஷன் பெரேரா ஆகியோர் கருத்து தெரிவிக்கையில், யுத்தத்திற்குப் பின்னர் வடக்கு கிழக்கில் உள்ள பட்டதாரிகளை தொழில்வாய்ப்பிற்குள் உள்வாங்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். ஏற்கனே பல தொழில்வாய்புகள் வழங்கப்பட்டுள்ளன.உள்வாரியாகவும் வெளிவாரியாகவும் வருடாந்தம் சுமார் பத்தாயிரம் பேர் பட்டதாரிகளாக வெளியேறுகின்றனர். இரண்டாயிரம் பேர் மட்டுமே ஓய்வு பெறுகின்றனர். சமுர்த்தியில் 1500 பட்டதாரிகள் உள்வாங்கப்படவுள்ளனர். இவ்வருடம் முகாமைத்துவ சேவைக்கு ஐந்தாயிரம் பேர் வரை உள்வாங்கப்படவுள்ளனர். அதில் வடக்கு கிழக்கில் இருந்து 750 பேர் உள்வாங்கப்படவுள்ளனர்.

பிரதமரின் வடக்கு விஜயத்தின் போது உறுதியளிக்கப்பட்டது போல் ஆயிரம் அரச நியமனங்கள் விரைவில் வழங்கப்படும். இப்பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. தற்போது 15 இலட்சம் பேர் அரச உத்தியோகத்தில் உள்ளனர். வருடாவருடம் வெளியேறும் பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதில் பாரிய சிக்கல் காணப்படுகிறது என்று தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435