சமூக ஊடகங்களில் அவதூறு பதிவுகளை தடுக்க விரைவில் புதிய சட்டம்

சமூக ஊடகங்களில் அவதூறான பதிவுகள் மற்றும் கருத்துக்கள் வெளியிடுவதை தடுப்பதற்கு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதுடன் சமூக ஊடகங்கள் வாயிலாக வெறுப்புனர்வை பரப்பும் வகையிலான இன,மத ரீதியாக அமைந்த பதிவுகளை உடனடியாக அகற்றும் பொறிமுறையையும் பாதுகாப்பு அமைச்சு அறிமுகப்படுத்தவுள்ளது.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் இணைய வழி பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தேசிய இணையவெளி பாதுகாப்பு மூலோபாயத்தின் கீழ் உருவாக்கப்படவுள்ள புதிய சட்ட வரைவானது விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இணையவெளி பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், நிகழ்வுகளை திறம்பட நிர்வகித்தல் மற்றும் முக்கிய தகவல் உட்கட்டமைப்பை பாதுகாத்தல் போன்ற விரிவான கட்டமைப்பை நிறுவும் உத்தேச இணையவெளி பாதுகாப்புச் சட்ட நடவடிக்கைகளை துரிதமாக நிறைவு செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு ( SLCERT ) அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இணைய பாதுகாப்பு தொடர்பாக, இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு உறுப்பினர்கள் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது இணைய பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் இறுதி சட்ட தெளிவுபடுத்தல்களுக்காக சட்ட வரைஞரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக மேற்படி குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இணைய குற்றங்களில், கடனட்டை மோசடி, பழிவாங்குதல், ஆபாசம், சொத்துக்களுக்கு எதிரான குற்றங்கள், ஹேக்கிங் மற்றும் புலமைச் சொத்து திருட்டு போன்ற தனிநபர்களுக்கு எதிரான குற்றங்களும் இணையவெளி பயங்கரவாதம், இணையத் தளங்களை ஹேக் செய்தல், அங்கீகாரமற்ற தகவல்களை செயலாக்குதல் மற்றும் முக்கியமான நிதி தரவை ஹேக் செய்தல் போன்ற அரசாங்கத்திற்கும் பிற அமைப்புகளுக்கும் எதிரான குற்றங்கள் அடங்கும்.

புதிதாக தயாரிக்கப்பட்டுவரும் பொறிமுறையின் கீழ், நாட்டில் உள்ள இணைய பாதுகாப்பு தொடர்பான அனைத்து விவகாரங்களுக்கும் ஒரு உச்ச அமைப்பாக டிஜிட்டல் உட்கட்டமைப்பு பாதுகாப்பு நிறுவனம் ( DIPA ) அமைக்கப்படவுள்ளது.

மூலம்: தினகரன்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435