பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கும், மதங்களுக்கும் இடையில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை தடுப்பதற்கு புதிய சட்டத்தை உருவாக்குவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஆணையாளர் அலுவலக அதிகாரிகள் குழுவினருடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எவ்வித பொறுப்புணர்வுமின்றி மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளினால், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம், பெருமளவானோர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இதன் காரணமாக, இலங்கையில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போது, இடம்பெறுகின்ற அதுபோன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான சட்டத்திட்டங்கள் அவசியமாக உள்ளது.
இதற்கான நடவடிக்கைகளின்போது, சர்வதேச ரீதியில் நடைமுறை நிலமைகள் மற்றும் அனுபவங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து கிடைக்கும் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானதாகும் என நீதி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்போது, அவசியமான சட்ட மறுசீரமைப்புகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க இணக்கம் தெரிவித்ததாக நீதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைத்தளம்