சம்பள அதிகரிப்பு தீர்மானத்தின் மத்தியில் தொடரும் போராட்டங்கள்

2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்தும் வகையில், அரச ஊழியர்களின் சம்பளம் ஆகக்குறைந்தது 3,000 ரூபாவினாலும் ஆகக்கூடியது 24,000 ரூபாவினாலும் அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட சிபாரிசிற்கு அமைவாக அரசாங்க ஊழியர்களின் மாதாந்த சம்பளம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்தும் வகையில் ஆகக்குறைந்த 3,000 ரூபாவினாலும் ஆகக்கூடிய 24,000 ரூபாவாலும் அதிகரிக்கக்கூடும். இந்த அதிகரிப்பு அனைத்து ஊழியர்களினதும் சம்பளம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதமளவில் 2015 ஆம் ஆண்டு இருந்த ஆரம்ப சம்பளத்திற்கு அமைவாக ஆகக்கூடிய வகையில் 107 சதவீதம் வரையிலான அதிரிப்பு மேலதிகமாக இடம்பெறுகின்றது.

இதற்கு மேலதிகமாக இந்த புதிய சம்பள அதிகரிப்பு காரணமாக அரச பிரிவில் பல்வேறு துறைகளில் நிலவிய சம்பள முரண்பாடுகள் நீக்கப்படும். சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்காக தேவையான சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்கு திரு. எஸ்.ரணுக்கே தலைமையிலான 15 பேரைக்கொண்ட சம்பள மதிப்பீட்டு ஆணைக்குழு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளது.

இதன் பெறுபேறாக அரச துறையில் அனைத்து ஊழியர்களினதும் சம்பளம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் மேலும் அதிகரிப்பதுடன் விஷேடமாக ரயில் மற்றும் தபால் சேவைகள் உள்ளிட்ட சம்பள முரண்பாடு அரச துறையில் நிலவுமாயின் அவை முற்றாக நீக்கப்படும்.

ரயில் சேவையில் சம்பள முரண்பாடு நீக்கப்படுவதனால் ரயில் தொழில்நுட்ப சேவைக்கு உட்பட்ட ரயில் செயற்பாடு ஃ கண்காணிப்பு முகாமைத்துவ சேவைக்குட்பட்ட அதிகாரிகள் (ளுரிநசஎளைழசல ஆயயெபநஅநவெ ளுநசஎiஉந)அதிகாரிகளுக்காக வுடு என்ற புதிய சம்பள முறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு அதன் ஆரம்ப சம்பளம் 36,095 ரூபா என்ற ரீதியில் அமைக்கப்படும். இதற்கு மேலதிகமாக ரயில் எஞ்சின் சாரதி உதவியாளர்களின் (சுயடைறுயல நுபெiநெ னுசiஎநச யுனைந ) சம்பளம் ஆவு 1 சம்பளத்தில் ஆரம்ப சம்பளம் 34,415 ரூபாவாக அமையும்.

இதற்கு அமைவாக ரயில்வே ஊழியர்கள் தமது சம்பள முரண்பாட்டை நீக்குமாறு கோரி மேற்கொண்ட தொழிற்சங்க செயற்பாட்டை தொடர்ந்தும் முன்னெடுக்கவேண்டிய தேவை ஏற்படவில்லை. இதற்கு அமைவாக இந்த அதிகரிப்பின் கீழ் 2015 ஆம் ஆண்டில் 11,730 ஆக இருந்த அரச சேவை ஆரம்ப மட்ட ஊழியர்களின் ஆககுறைந்த அடிப்படை சம்பளம் 2020 ஆம் ஆண்டளவில் 24,250 ரூபா வரையில் அதிகரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இது உரிய சம்பள முரண்பாடு தொடர்பான ஆணைக்குழுவின் சிபாரிசிற்கு அமைவாக சம்பளம் 27,250 ரூபா வரையில் 3,000 ரூபாவினால் மேலும் அதிகரிக்கின்றது. இந்த சம்பள அதிகரிப்பிற்கு அமைவாக சுமார் 11 இலட்சமான அனைத்து அரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவு அதிகரிக்கின்றது. மேலும் இந்த புதிய சம்பள அதிகரிப்பு அடிப்டை சம்பளத்துடன் ஒன்றிணைக்கப்படுவதுடன் சம்பளத்திற்கு சமனான தொகை மொத்தமாக இடர் கடன் மற்றும் சொத்துக்கடன்களை பெற்றுக்கொள்வதில் தற்பொழுது பெற்றுக்கொள்ளப்படும் அளவிலும் பார்க்க கூடுதலான தொகையை கடனாக பெற்றுக்கொள்வதற்கு அரச ஊழியர்களிற்கு சலுகை கிடைக்கின்றது.

அடிப்படை சம்பளத்திற்கு அமைவாக மேலதிக கொடுப்பனவு உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகள் அதிகரிக்கும். 2015 ஆம் அண்டில் 562 பில்லியனாக இருந்த அரச ஊழியர்களின் சம்பள கொடுப்பனவு தொகை தற்பொழுது 750 பில்லியன் வரை அதிகரிக்கும். ஓய்வூதிய சம்பள செலவு 2015 ஆம் ஆண்டில் 157 பில்லியனாக இருந்தது. தற்பொழுது இந்த தொகை 225 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கும்.

அதிகரிக்கப்பட்ட இந்த புதிய சம்பளம் 2020 ஜனவரி மற்றும் 2021 ஜனவரி தொடக்கம் சமமான அளவில் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காகா 2020 ஆம் ஆண்டில் 120 பில்லியன் ரூபாவும் 2021 ஆம் ஆண்டில் மேலும் 120 பில்லியன் ரூபாவும் செலவிடவேண்டும். கடந்த 4 வருடத்திற்கு மேற்பட்ட காலப்பகுதியில் அரச சேவையில் புதிதாக சுமார் 75,000 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

எவ்வாறிருப்பினும், சம்பள அதிகரிப்புக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தொழிற்சங்க போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

தங்களது சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்து ரயில்வே தொழிற்சங்கம் கடந்த 24ஆம் திகதி நள்ளிரவு முதல் தொடர் போராட்டத்தை மேற்கொள்கிறது.

இதேவேளை, ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் 26ஆம், 27ஆம் திகதிகளில் இரலண்டு நாட்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர், அதிபர்களின் சேவையில் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்கு ஆலோசனைகள் மற்றும் சிபாரிசு முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில்,  அவர்கள் சுகயீன விடுமுறையில் சேவைக்கு சமூகமளிக்காமை பெரும் அநீதியான செயற்பாடாகும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளிட்ட அரசாங்கத்தின் அனைத்து ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரச சேவைகள் சம்பள முரண்பாட்டை நீக்கும் குழுவின் சிபாரிசை அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைப்படுத்துவதற்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில் தமது சம்பள முரண்பாட்டை அடிப்படையாக கொண்ட ஆசிரியர்களும் அதிபர்களும் சுகயீன விடுமுறையில் சேவைக்கு சமூகமளிக்காமை பெரும் அநீதியான செயற்பாடாகும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஊழியர்களுக்குள்ள உரிமையாகும். அதற்கு சவால் விடுக்கப்படவில்லை. இருப்பினும் இடம்பெறக்கூடிய சம்பள அதிகரிப்பு குறித்து அறிந்து கொண்ட பின்னரும் தமது நடவடிக்கையின் காரணமாக பெறப்பட்ட வெற்றியாக சுட்டிக்காட்டி அங்கத்தவர்களை ஏமாற்றுவதற்கான மூலோபாயமாக பயன்படுத்தப்படும் தொழிற்சங்கங்களின் சந்தர்ப்பவாத செயற்பாடுகளில் ஏமாறுகின்றமை ஆசிரியர் அதிபர்கள் போன்ற புத்திசாலிமிக்க கௌரவமான தொழிலுக்கு ஏற்புடைய செயற்பாடு அல்ல என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டுக்கு அமைவாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளம் பாரியளவில் அதிகரிக்கப்பட்டதுடன் இத்தொகை 106 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டதாகவும் அதே போன்று சம்பளம் அதிகரிக்கப்பட்டமை எந்தவொரு அரசாங்கத்தினாலும் மேற்கொள்ளப்பட்ட நவடிக்கையாகும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நாடாளுமன்றத்தில் கடந்த ஜுலை மாதம் தெரிவித்துள்ளார்.

அரச சேவைக்குள் பொதுவாக நிலவும் சம்பள முரண்பாடு குறித்து நியமிக்கப்பட்ட றனுக்கெ குழுவிடம் ஆசிரியர்கள் அதிபர்களின் சம்பள முரண்பாடு தொடர்பாக கல்வி அமைச்சு ஆலோசனைகளையும் சிபாரிசுகளையும் சமர்ப்பித்திருந்ததாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

அதிபர்களுக்கான கொடுப்பனவு 650 ரூபாவில் இருந்து 6,500 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் அண்டு தொடக்கம் தாமதப்பட்டிருந்த பதவி உயர்வு பணிகள் தற்பொழுது முறையாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்வதற்கு இடம்பெறவேண்டிய முறையை தயாரித்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதிபர் சேவையை அரசியலில் இருந்து மீட்டெடுத்து அந்த சேவையில் அதிபர் தரத்தில் நிலவிய குறைபாடுகளை தீர்ப்பதற்காக போட்டிப்பரீட்சை நடத்தப்பட்டு சுமார் 6,000 பேர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். ஆசிரியர் மற்றும் அதிபர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சிக்கான சந்தர்ப்பம் பெற்றுக்கொடுக்கப்பட்டமை, ஆசிரியர் சேவையில் 25,000 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டமை முதலான நடவடிக்கைகள் கடந்த நான்கரை வருட காலப்பகுதியில் அதாவது குறுகிய காலப்பகுயில் நிறைவேற்றப்பட்டன.

இவை கல்வித்துறையில் மனிதவள அபிவிருத்தியின் நோக்கமாக முன்னெடுக்கப்பட்ன என்றும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435