அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்ற சம்பள ஆணைக்குழு, தமது கோரிக்கைகளை நிறைவேற்றாது என ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச துறையினரின் சம்பள அதிகரிப்பு மற்றும் முரண்பாடுகளை தீர்க்கும் நோக்கில் புதிய சம்பள ஆணைக்குழுவை அமைக்கும் யோசனைக்கு கடந்த வாரம் அமைச்சரவை அனுமதியளித்தது.
எனினும் இந்த சம்பள ஆணைக்குழுவின் ஊடாக ரயில்வே தரநிலைகளில் காணப்படும் முரண்பாடுகளை நீக்க முடியாது என ரயில் கட்டுப்பாட்டாளாகளின் சங்கத்தின் தலைவர் லால் ஆரியரத்த குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவினால் சம்பள முரண்பாடுகளை தீர்க்க முடியும்.
எனினும், தரநிலைகளின் முரண்பாடுகள் குறித்த தீர்வு காணுவது தொடர்பில் குறித்த ஆணைகுழுவின் பணிகளில் குறிப்பிடபட்டிருக்க வில்லை.
எனவே, அற்த ஆணைக்குழுவினால் தமது பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுகொள்ள முடியாது என ரயில் கட்டுப்பாட்;டாளர்களின் சங்கத்தின் தலைவர் லால் ஆரியரத்த குறிப்பிட்டுள்ளார்.