சம்பள பிரச்சினை தொடர்பில் பேச்சுக்களை நடத்தத் தயார்- அமைச்சர்

அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினை பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் தயாராக உள்ளது. எனவே தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டங்களை முன்னெடுத்து பொது மக்களை அசௌகரியங்களுக்குள்ளாக்க கூடாது என்று பொது நிர்வாக, முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு பிரச்சினைக்கும் தொழிற்சங்க நடவடிக்கையை செயற்படுத்தாது பேச்சுவார்த்தையினூடாக தீர்வு காண தொழிற்சங்கங்கள் முன்வரவேண்டும். பல்வேறு அரசியல் அரசியல் நோக்கங்களுக்காக சதி திட்டங்களில் ஈடுபடுவதை அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது. அரச ஊழியர்களின் சம்பளம் 107 வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்காக அரசாங்கம் வழமையை விடவும் இருமடங்கு நிதியை ஒதுக்கியுள்ளது.

நிறைவேற்று அதிகாரிகளின் சம்பள பிரச்சினை தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி அமைச்சரவை அனுமதிக்கான பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இன்னமும் முழுமையான அனுமதி கிடைக்கவில்லை. இதனை அடிப்படையாக கொண்டு எந்தவொரு தரப்பினருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அவர்களுடன் பேச்சுக்களை நடத்தி தீர்வு காண்பதற்கு நாம் தயாராகவுள்ளோம் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435