
சம்பள முரண்பாடு குறித்து 400இற்கும் அதிகமான கருத்துக்களும், யோசனைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சம்பள ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிக்கை எதிர்வரும் 30ஆம் திகதிக்க முன்னர் ஜனாதிபதிக்க சமர்ப்பிக்கப்படவேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆதன் காரணமாக கருத்துக்களையும், யோசனைகளையும் பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்களுக்கு குறுகிய கால அவகாசமே வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தற்போதுவரை கிடைத்துள்ள கருத்துக்களையும் யோசனைகளையும் சம்பள ஆணைக்குழு ஆராய்ந்து வருகின்றது.
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் தொழிற்சங்கங்கள், அமைச்சுகள், திணைக்களங்கள் என்பனவற்றின் அதிகாரிகளுடன் கலந்துரையாடவும் ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் சம்பள ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
வழிமூலம்: சூரியன் செய்திகள்