நாளை (30) இரவு 8 மணிமுதல் எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு நாளை இரவு 8 மணிக்கு அமுலாக்கப்படவுள்ள ஊரடங்கு சட்டம் மே மாதம் 4ஆம் திகதி அதிகாலை 5 மணிவரை நடைமுறையில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து அமுலில் உள்ளது.
நாளை மறுதினம் சர்வதேச தொழிலாளர் தினம் (மே தினம்) அமைகின்றநிலையில், அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தை நாடுமுழுவதும் பிறப்பித்துள்ளது.