சர்வதேச மகளிர் தினத்தில் ரயில்களில் மகளிருக்கு விசேட இட ஒதுக்கீடு

நாளைய தினம் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இலங்கையில் அலுவலக ரயில்களில் மகளிரிக்காக தனியான ஒரு ரயில் பெட்டியை ஒதுக்கிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் நாளைய தினம் வெயாங்கொட ரயில் நிலையத்தில் இருந்து 6.59 மணியளவில் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வு போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் இடம்பெறவுள்ளது.

பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கும், துன்புறுத்தல்களுக்கும் உள்ளாவதை கட்டுப்படுத்துவதற்காகவே குறித்த நடடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வழிமூலம்: லங்காதீப

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435