சவுதியில் இறந்தவரின் சடலம் 3 மாதங்களின் பின் இலங்கைக்கு

சவுதியில் பணியாற்றிக்கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த இலங்கையரின் சடலம் மூன்று மாதங்களின் பின்னர் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இரு வருடங்களாக சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்த நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இன்ஜஸ்ரி தோட்டம் பீரட் பிரிவைச் சேர்ந்த ஒகஸ்டின் என்பவரது சடலமே இவ்வாறு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஐந்து பிள்ளைகளின் தந்தையான ஒகஸ்டின் கடந்த ஓகஸ்ட் மாதம் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். உரிய ஆவணங்களை இலங்கை தூதரகத்திடன் ஒப்படைத்த போதும் 3 மாத இழுபறியின் பின்னர் சடலம் தற்போது இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தனது இரண்டு வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்து கடந்த ஓகஸ்ட் மாதம் நாடு திரும்பவிருந்த நிலையிலேயே அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435