லஞ்சம் பெற்றுக்கொண்ட தொழில் திணைக்கள அதிகாரி கைது

லஞ்சம் பெற்றுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் மாத்தறை மாவட்ட தொழிலாளர் அலுவலக அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லஞ்சமாக 30,000 ரூபாவை மாத்தறை நகரில் வைத்து பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்திலேயே இவ்வதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

திஹாகொட பிரதேசவாசியொருவரினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய இச்சுற்றுவளைப்பு மேற்கொள்ளப்பட்டது என்று லஞ்ச ஊழல் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றும் இரு ஊழியர்களுக்கு ஊழியர் நம்பிக்கை நிதியம் வழங்கப்படாதிருந்தமை தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாதிருப்பதற்காக இந்த லஞ்சம் பெறப்பட்டுள்ளதுඅල්ලස් ලබාගැනීමේ සිද්ධියක් සම්බන්ධයෙන් මාතර දිස්ත්‍රීක් කම්කරු කාර්යාලයට අනුයුක්ත

முறைப்பாட்டாளரிடம் 60,000 ரூபா லஞ்சம் கேட்டு அதில் 30,000 ரூபா பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தில் இவ்வதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் இன்று (28) மாத்தறை மாவட்ட நீதவான் நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435