சவுதி சென்ற 11 பெண்களும் எங்கே?

வேலைவாய்ப்பு நாடி சவுதி அரேபியாவிற்கு சென்று எவ்வித தொடர்புமின்றியுள்ள இலங்கையர் தொடர்பில் விபரம் அறிய இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பொது மக்களின் உதவியை நாடியுள்ளது.

பணிப்பெண்களாக சென்ற 11 பெண்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லாத நிலையில் அப்பெண்களின் உறவினர்கள் பணியகத்துக்கு முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்தே பணியகம் பொது மக்களின் உதவியை நாடியுள்ளது.

சவுதி அரேபியாவுக்கு தொழில் வாய்ப்பு பெற்று சென்ற நிலையில், பல வருடங்களாக எந்த தகவல்களும் இல்லாமல் இருந்து வரும் 11 இலங்கை பெண்கள் குறித்த தேவைான விபரங்களை பெற்றுக்கொள்ள உதவி வழங்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

குறித்த பெண்களின் விபரங்களை சவுதி தூதரக அலுவலகத்துக்கு வழங்கி அவர்களை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஸ். ராசீயா தாருஸ்ஸலாம் பாரே, பஷாரு பள்ளி வீதி – மூதூர் 4, பீ. சூரியகுமாரி. அம்பிலாந்துறை மேற்கு, கொக்கட்டிச்சோலை, ஜீ. சுனேந்திரா விஜேமெிக்கே , இலக்கம் 33 ரேந்தபொல – உலபனை, எச்.டி. நிரோஷா நிலந்தி, எதேவே வேகொல்லாகம -அவுலேகம, கே. கிருஷ்ணவாணி , அசுலகந்த தோட்டடம் கவுடுபெல்லே – மாத்தளை, யு.பீ.எஸ். மல்காந்தி – 20 ஏக்கர் கலபிட்டமுல்ல, ஹிந்தகொல்ல- குருணாகல், எம். ராசாலெச்சுமி இலக்கம் 13 லேக் வீதி மடுகெலே – கண்டி , எஸ். கமலானி 23 மாபிட்டிகம தோட்டம் அமிதிரிகலை, எம்.ரி. ரமீசா 12/2 மலயார் வீதி விலினியட் 1 சம்மாந்துறை, எம்.டி. புஷ்பராணி 57 சாந்திபுர, நுவரெலியா, கே.எம். தனவதி இலக்கம் 53 பெராமடை, ஹலி -எல – பதுளை, வி. செல்வராசா. மகிழடித்தீவு கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு ஆகிய முகவரிகளை குறித்த பெண்கள் வழங்கியுள்ளனர்.

1996 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சவுதி அரேபியாவிற்கு பணிப்பெண்களாக தொழில்வாய்ப்பு பெற்று சென்றுள்ள குறித்த பெண்கள் தொடர்பான தகவல் தெரிந்தால், இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் வெளிநாடு தொடர்பு பிரிவின் 011 – 4379328 என்ற தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொண்டு அறிய தருமாறு பணியகம் கோரியுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435