கடந்த 10 வருடங்களாக சவுதி அரேபியாவில் சம்பளமின்றி பணிப்பெண்ணாக பணியாற்றிய நாடு திரும்பிய பெண்ணுக்கான மொத்த சம்பளத்தையும் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நேற்றுமுன்தினம் கையளித்தது.
இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து கடந்த 2006 ஆம் ஆண்டு சவுதி சென்ற நந்தா மனம்பேரி என்ற பெண்ணுக்கான 10 வருட சம்பளமாக 2,107,951.00 ரூபா ( 54,000 சவுதி ரியால்) அமைச்சர் தலத்தா அத்துகோரளவினால் வழங்கப்பட்டது.
வௌிநாடு சென்ற பின்னர் நீண்டகாலமாக எந்த வித தொடர்புமில்லாத காரணத்தினால் குறித்த பெண்ணின் மகன் கடந்த 2011ஆம் ஆண்டு பணியத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதன் பின்னர் அவருடைய தகவல்கள் சவுதியிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் வேலை அனுமதியை புதுப்பிக்க இலங்கை குறித்த பெண்ணை அவரது எஜமான் அழைத்து வந்த போது அடையாளங்கண்ட தூதரகம் உடனடியாக தூதரகத்தின் சுரக்ஷா இல்லாத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு இலங்கை அனுப்பப்பட்டுள்ளார்.
அவருக்கான காசோலையை அமைச்சர் கடந்த முதலாம் திகதி கையளித்தமை குறிப்பிடத்தக்கது.