பிணைமுறி விவகார கொடுக்கல் வாங்கல்களால் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு ஏற்பட்டுள்ள நட்டம் குறித்து இலங்கை மத்திய வங்கி கணக்கிட்டுள்ளதாக அதன் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
மத்தியவங்கி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது குறித்த விடயம் தொடர்பில் நீதிமன்ற விசாரணைகள் நடைபெற்று வருவதனால் தாம் எதுவும் கூற விரும்பவில்லை என்றும் வழக்கு விசாரணைகள் முன்னோக்கிச் செல்லும் போது சேமலாப நிதியத்திற்கு ஏற்பட்டுள்ள நட்டம் தொடர்பில் தெரியவரும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் எதையும் மறைக்கவில்லை. புலனாய்வு மற்றும் சிவில் சிவில் வழக்கு வழக்குகள் தற்போது நடைபெற்று வருகிறது. குறிப்பாக பிணைமுறி விவகாரத்தினால் அரச நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை மீள பெறுவதற்கு சிவில் சட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு சட்டமா திணைக்களத்திடம் கோரியுள்ளேன் என்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.