சாரதிகளின் கவனத்திற்கு: விதிமீறல் அபாரதங்களுக்கு நாடாளுமன்றம் அனுமதி

வாகனங்களை செலுத்தும் சாரதிகளினால் இழைக்கப்படும் வீதி விதிமீறல்களுக்கு இதுவரை அறவிடப்பட்ட அபராதத்தை அதிகரிப்பதற்கான வாகன போக்குவரத்து சட்டத் திருத்தத்திற்கு நாடாளுமன்றம் நேற்று அனுமதியளித்தது.

சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துதல். தொடருந்து வழித்தடத்தில் பாதுகாப்பற்ற முறையில் வாகனம் செலுத்துதல். மதுபானம் மற்றும் போதைப்பொருளை பயன்படுத்திய நிலையில் வாகனம் செலுத்துதல், அனுமதிக்கப்பட்ட காப்புறுதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்துதல் உள்ளிட்ட விதிமீறல்களுக்கான குறைந்தபட்ச அபராதம் 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்துக்குள்ளாவதனால் ஏற்படும் உயிரிழப்பிற்காக அறவிடப்படும் அபராதத்தை ஒரு இலட்சம் ரூபாவிருந்து, ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதுடன், இரண்டு ஆண்டுகளுக்கு குறையாத சிறைத் தண்டனையும், சாரதி அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேநேரம், அதிக வேகத்துடன் வாகனம் செலுத்தும் விதிமீறலுக்காக நான்கு வேக பிரிவுகளின் அடிப்படையில் 3 ஆயிரம் ரூபா முதல் 25 ஆயிரம் ரூபா வரை அபராதம் அறவிடப்படவுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435