யாழ்ப்பாணம், சாவகச்சேரி சந்தை வியாபாரிகள் தமது கடைகளை அடைத்து நகரசபைக்கு எதிராக நேற்று (29) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தனியாருக்கு சந்தையை குத்தகைக்கு வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் சந்தை மீளப்பெறப்பட்டு அறவிடப்படும் வரி குறைக்கப்படவேண்டும், மலசலகூட வசதிகள் சுகாதாரமாக செய்துத் தரவேண்டும் ஆகிய கோரிக்கைளை முன்வைத்தே இவ்வார்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தையில் இருந்து பேரணியாக புறப்பட்ட வியாபாரிகள் புகையிரத நிலைய வீதியினூடாக சாவகச்சேரி நகரசபையை சென்றடைந்தனர். அங்கு நகரசபை தவிசாளர் சிவமங்கை இராமநாதனிடம் மகஜர் ஒன்றையைும் கையளித்தனர்.
இப்போராட்டம் காரணமாக விவசாயிகளும் பொதுமக்களும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியமை குறிப்பிடப்பத்தக்கது.