சிறுவர்களை வேலைக்கமர்த்தினால் 25,000 ரூபாஅபராதம்!

சிறுவர்களை வேலைக்கமர்த்தும் குற்றத்திற்காக விதிக்கப்பட்டிருந்த அபராதத் தொகை அதிகரிக்கப்படவுள்ளது. அதன்படி இதுவரை 10,000 ரூபாவாகவிருந்த அபராதத் தொகையானது 25,000 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது என்று தொழிற்றுறை அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார்.

சிறுவர்களை வேலைக்கமர்த்துவததை முழுமையாக இல்லாதொழிக்கும் நோக்கில் இவ்வாறு தண்டப்பணம் அதிகரிக்கப்படவுள்ளது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், சிறுவர்களை வேலைக்கமர்த்தும் குற்றத்திற்காக 10,000 ரூபா தண்டப்பணமாக அறவிடப்படுவது போதுமானதல்ல. எனவே அதனை 25,000 ரூபாவாக அதிகரிக்கப்படவேண்டும். இலங்கையில் சிறுவர்களை வேலைக்கமர்த்துவது சட்டபடி தடை செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு சிறுவர்களை வேலைக்கமர்த்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தொழில் திணைக்களத்திற்கு உள்ளது. சிறுவர்களை தொழிலுக்கமர்த்தியிருக்கின்றமை தொடர்பில் அறிந்திருந்தால் உடனடியாக எமக்கு தெரியப்படுத்துங்கள்

சிறுவர்கள் 16 வயது வரை பாடசாலை சென்று கற்க வேண்டும். இதனை நாம் கடுமையாக நடைமுறைப்படுத்தவுள்ளோம். எனவே இதற்குப் பின்னர் 14 வயதுக்கு குறைந்த சிறுவர்களை வேலைக்கமர்தினால் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435