சிறு – பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பான அமைச்சின் அறிவித்தல்

2019.12.24ஆம் திகதி இலங்கை தேயிலை சபையின் தலைமையகத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி விவசாய அமைச்சர் ரமேஸ் பத்திரன மற்றும் தேயிலை கைத்தொழிற் துறை இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தேயிலை உற்பத்தி துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் நன்மைக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பல முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இலங்கை தேயிலை சபையின் புதிய தலைவர் ஜயம்பதி மொல்லிகொட உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் ஏகோபித்த அபிலாஸையான பெருந்தோட்டக் கைத்தொழிற் துறை உள்ளிட்ட உள்நாட்டு கைத்தொழிற் துறைகளின் மேம்பாடு தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தி அதனை நிறைவேற்றுவதற்கும் அந்த எதிர்கால இலக்கினை யதார்த்தமாக்குவதற்கான சவாலாக தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பினை வழங்கும் தேயிலை, இறப்பர், தெங்கு உள்ளிட்ட கைத்தொழிற் துறைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அத்தியாவசியமாகும் எனக் குறிப்பிட்டார்.

மேலும் எமது தேசிய சொத்தாகிய இந்த மண்ணோடு போராடும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார நிலையில் பாரிய பிரச்சினைகள் காணப்படுவதனால் அவர்களது நலன்புரி தேவைகளை நிறைவேற்றுதல் மற்றும் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களையும் பெருந்தோட்டத் தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும் என்பதனால் அதனை அடிப்படை சமூக பொறுப்பாகக் கருதி விசேட கவனம் செலுத்தப்படும் என தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையில் மறைந்துவரும் தேநீர் கலாசாரத்தை மீண்டும் உலகில் உன்னத நிலைக்கு கொண்டுவருவதற்கும் தேநீர் தொடர்பில் மிகுந்த ஆர்வமுடைய பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகள் மீது கூடுதல் கவனம் செலுத்தி உயர்தரத்திலான தேயிலையை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

நெருக்கடி நிலைமை தோன்றியுள்ள தேயிலை உற்பத்தி துறைக்கு தற்போது பாரிய பங்களிப்பினை வழங்கிவரும் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள்மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்கள் தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்தி அவர்களது தேவைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதற்காக தேயிலை உற்பத்தியாளர்களுக்கு புதிய தொழிநுட்ப உபகரணங்களை அறிமுகப்படுத்தல், மீள் தேயிலை பயிர்செய்கையை மேற்கொள்வதற்கான சகல உதவிகளையும் பெற்றுக்கொடுத்தல் மற்றும் தேயிலை கைத்தொழிற்துறையை சீரமைப்பதற்கு விரைவில் செயற்திறன்மிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தேயிலை உற்பத்தி துறையை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கான ஒத்துழைப்பினையும் தேசிய தனித்துவத்துடன் செயலாற்றும் ஆற்றலையும் சர்வதேச சந்தையில் உயர்ந்த நிலையையும் பெற்றுக்கொள்வதற்கு உறுதியுடன் செயற்படுவதனால் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக எம்முடன் கைகோர்த்து செயற்படுமாறு தேயிலை சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பெருந்தோட்டக் கைத்தொழிற் துறையுடன் இணைந்து செயலாற்றும் அனைத்து நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் கௌரவத்துடன் அழைப்பு விடுக்கப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த தேயிலை கைத்தொழிற் துறை இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர  இலங்கை தேயிலைச் சபை பெருந்தோட்டக் கைத்தொழிற் துறை அமைச்சின் மிக முக்கிய நிறுவனம் என்பதனால் இதனூடாக தேயிலை கைத்தொழிற் துறை சார்ந்த அனைத்து பணியாளர்களுக்கும் உரிய பாதுகாப்பினை வழங்கி அவர்களது நலன்புரி தேவைகளை பூர்த்தி செய்து தேயிலை கைத்தொழிற் துறையை உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் உயரிய நிலைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேயிலைக் கைத்தொழில் துறை பின்னடைவிற்கான விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435