சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா

பொரளை – சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

நேற்று மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையின் முடிவின்படி, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதாக கொழும்பு மாநாகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் பொலனறுவையை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

5 மாத குழந்தை ஒன்றின் தந்தைக்கு முன்னதாக கொரோனா தொற்றுறுதியான நிலையில் அவருடன் தொடர்புடையவர் என்ற அடிப்படையில் குறித்த குழந்தை பொரளை – சீமாட்டி ரிஜ்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றது.

இந்தநிலையில், அந்த குழந்தை சிகிச்சை பெறும் நோயாளர் அறையில் ஊழியராக சேவையில் ஈடுப்பட்டுள்ள குறித்த ஊழியருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதாக கொழும்பு மாநாகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435