அதிபர் மற்றும் ஆசிரியர் சேவைகளில் காணப்படும் சம்பள பிரச்சினை தொடர்பில் மேற்கொள்ளப்படவிருந்த சுகயீன லீவு போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
சம்பள பிரச்சினைக்கு நீண்ட காலம் தீர்வு பெற்றுக்கொடுக்காமையினை சுட்டிக்காட்டும் வகையில் எதிர்வரும் மே மாதம் 9 ம், 10ம் திகதிகளில் சுகயீன லீவு போராட்டத்தை மேற்கொள்ள அழைப்பு விடுத்திருந்தது. எனினும் கடந்த 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களையடுத்து நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால நிலைமை மற்றும் மாணவ மாணவிகளின் பாதுகாப்புக் கருதி இத்தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
அன்றைய தினங்களில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சேவைக்குச் செல்லுமாறு கோரியுள்ள ஆசிரியர் சங்கம் தமது பிரச்சினைக்கு தீர்வை எட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிடின் நாட்டின் நிலைமை வழமைக்கு திரும்பியவுடன் அறிவிப்பின்றி தொழிற்சங்க நவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசாங்கத்தை எச்சரித்துள்ளது.
மூலம்- அத தெரண
வேலைத்தளம்