சுகாதாரதுறை ஊழியர்களை வீடுகளில் தனிமைப்படுத்துங்கள்! – சமன் ரத்னப்பிரிய

சுகாதாரதுறை ஊழியர்களை தனிமைப்படுத்தலுக்கு இராணுவத்திடம் அனுமதி பெறவேண்டியேற்பட்டுள்ளது என்று இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொவிட் 19 இரண்டாம் அலை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் கொவிட் 19 தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சுகாதாரத்துறை ஊழியர்களை இராணுவத்தின் கீழ் இயங்கும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்த வேண்டாம் என்று இலங்கை அரச தாதியர் சங்கம் வேண்டுகோள் விடுத்த சந்தர்ப்பத்திலேயே இவ்விடயம் தெரியவந்துள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

தாதியர் உட்பட சுகாதாரதுறை ஊழியர்கள் ஏனைய நோயாளர்களுடன் தனிமைப்படுத்தப்படுவது சுகாதாரசேவையை ஆபத்திற்கு இட்டுச்செல்லும் செயலாகும் என்று அரச தாதியர் சங்கம் எச்சரித்துள்ளது.

ஏனெனில் வைத்தியர்கள், தாதியர்கள் நோய் பாதுகாப்புத் தொடர்பில் தௌிவுள்ளவர்கள். அவர்களை ஏனைய நோயாளர்களுடன் ஒன்றாக தனிமைப்படுத்த தேவையில்லை. அது அவர்களுக்கு ஆபத்தானது. நோயிலிருந்து விடுபடும் அறிவு அவர்களிடமுள்ளது. ஏனையோருக்கு நோயை பரப்பாதிருக்க அவர்களுக்கு அறிவுள்ளது.

எனவே, அவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்கி வீட்டிலேயே தனிமைப்படுத்துங்கள் என அரச தாதியர் சங்கத்தின் தலைவர் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435