சுகாதார அமைச்சு மருத்துவ விடயங்களுக்கான நிறைவுகாண் மற்றும் துணை மருத்துவ சேவையின் பயிற்சிகளுக்கு பயிலுனர்களை ஆட்சேர்ப்பு செய்தல் – 2019
சுகாதார அமைச்சின் மருத்துவ விடயங்களுக்கான நிறைவுகாண் மற்றும் துணை மருத்துவ சேவையின் பின்வரும் கற்கை நெறிகளுக்காக பயிலுனர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தகைமை கொண்டுள்ள இலங்கை பிரஜைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இந்த அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் (www.health.gov.lk) ஊடாக மாத்திரமே இதற்காக விண்ணப்பிக்க முடியும்.
சேவை | பயிற்சி நெறியின் பெயர் | பயிற்சிக்காலம் | பயிற்சியை தொடர வேண்டிய மொழி
|
நிறைவுகாண் தொழில்வல்லுனர் சேவை | மருந்தாளர் | 02 வருடங்கள் | ஆங்கிலம் |
தொழில்சார் சிகிச்சையாளர் | 02 வருடங்கள் | ஆங்கிலம் | |
கதிரியலாளர் | 02 வருடங்கள் | ஆங்கிலம் | |
துணை மருத்துவ சேவை | பாடசாலை பற்சிகிச்சையாளர் | 02 வருடங்கள் | ஆங்கிலம் |
சுகாதார பூச்சியியல் அலுவலர் | 02 வருடங்கள் | ஆங்கிலம் | |
கண் தொழில்நுட;பவியலாளர் | 02 வருடங்கள் | ஆங்கிலம் | |
செயற்கை அவயவ தொழில்நுட்பவியலாளர் | 03 வருடங்கள் | ஆங்கிலம் | |
பொது சுகாதார பரிசோதகர் | 02 வருடங்கள் | ஆங்கிலம் | |
இதயத்துடிப்பு பதிவாளர் | 01 வருடம் | ஆங்கிலம் | |
மூளை மின் இயக்கப் பதிவாளர் | 02 வருடங்கள் | ஆங்கிலம் | |
பொது சுகாதார ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் | 1ஃ4 வருடங்கள் | ஆங்கிலம் 1 | |
பல் தொழில்நுட்பவியலாளர் | 02 வருடங்கள் | ஆங்கிலம்
|
விண்ணப்பிக்க வேண்டிய முறை :
மேற்படி பயிற்சி நெறிக்கு சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின்
(www.health.gov.lk) ஊடாக மாத்திரமே இதற்காக விண்ணப்பிக்க முடியும். அதற்காக இந்த
அமைச்சின் இணையத்தளத்தில் உரிய பகுதியில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி
செய்யவேண்டும். விண்ணப்பத்தை நிரப்புவதற்கான அறிவுறுத்தல்கள் அந்த இணையத்தள
விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
30.11.2020 இற்கு முன்னர் குறித்த விண்ணப்பங்கள் அனுப்பிவைக்கப்படவேண்டும்.
குறிப்பு:
விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது உங்களுக்கு ஏதாவது சிக்கல்கள் எழுந்தால் அது
தொடர்பாக வாரத்தின் வேலை நாட்களில் மு.ப 9.00 தொடக்கம் 4.00 வரையான காலத்தில்
சுகாதார அமைச்சின் மனித வள முகாமைத்துவம் மற்றும் ஒருங்கிணைப்புப் பிரிவின்
தொலைபேசி இலக்கம் 0112 340 007 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அது
தொடர்பான அறிவுறுத்தல்களை பெற முடியும்.