சுதந்திர வர்த்தக வலய பொது தொழிலாளர் சங்கத்திற்கும் டெலிபோர்க வீல் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் இடையில் கூட்டு ஒப்பந்தம் வெற்றிகரமாக கைச்சாத்திடப்பட்டுள்ளது.
விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான டயர்களை உற்பத்தி செய்யு சுவீடன் நாட்டு பல்தேசிய கம்பனி சார் டெலிபோர்க் நிறுவனத்திற்கும் சுதந்திர வர்த்தக வலய பொது தொழிலாளர் சங்கத்துக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் உள்வாங்கப்பட்டுள்ள விடயங்களாவன,
நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் தொழிற்சங்க அங்கத்துவத்தை பெறும் உரிமையை மதிப்பளிப்பது அவசியம். சங்க நடவடிக்கைகளை கருத்திற் கொண்டு தொழிலாளர்களை அநீதியுடன் நடத்தக்கூடாது. தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு அவசியமான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் உதவி வழங்குவதற்கும் தொழில் வழங்குநர் இணக்குதல். தொழிற்சாலை வளாகத்தில் தொழிற்சங்க கூட்டத்தை நடத்துதல், முன்னறிவித்தலினூடாக சங்க அதிகாரிகளுக்கு தொழிற்சங்க நடவடிக்கைகளை பங்களிப்பு வழங்க காலம் ஒதுக்குதல், தொழிற்சங்க நடவடிக்கைகான நேரத்தை தடை செய்யாமை, அதேநேரம் தொழில்வழங்குநருடைய சேவைக்காலத்திற்கும் எவ்வித இடையூறும் விளைவிக்காது செயற்படுதல்.
தொழிலாளர்களின் சம்பள விவகாரம், நிதி சலுகைகள் வழங்குதல். தொழில் பாதுகாப்பு, வேலைத்தளத்தினுல் திடீர் விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்த்தல் சூழலலை ஏற்படுத்துதல் என்பன தொழில்வழங்குநரின் பொறுப்பாக கருதப்படுவதாகவும் பாதுகாப்பான சேவை தொடர்பில் தொழிலாளர்களை தௌிவுப்படுத்துதல், உற்பத்தியின் போது விசம் கலந்த இரசாயன பொருட்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது தொழில்வழங்குநரின் பொறுப்பாகும். தொழிலாளரின் அடிப்படை சம்பளம் 13, 000 மாக இருத்தல் மற்றும் 40000 ரூபா பெறுமதியான மருத்துவ காப்புறுதி என்பனவும் உள்வாங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 17ஆம் திகதி ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ள போதிலும் கடந்த 2014 மற்றும் எதிர்வரும் 2018 வரை செயற்படும் வகையில் இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. வேலை நேரத்தை உறுதிபடுத்தும் வகையில் மேலதிக கலந்துரையாடல்களை நடத்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
4 வருடங்களுக்கு செல்லுபடியாகும் இவ்வொப்பந்தத்தில் சம்பளம் மாற்றம் தொடர்பில் ஒவ்வொரு வருடமும் சங்கத்துடன் கலந்துரையாடவும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. மேலும் மதீப்பீட்டு நடவடிக்கைகளிலும் தொழிற்சங்கம் உள்வாங்கப்பட்டுள்ளது. இம்மதிப்பீடானது தொழிலாளர்களின் நிபுணத்துவம், வேலைத் தொடர்பான அறிவு, சிந்தனை என்பனவும் கவனத்தில் கொள்ளப்படவுள்ளதுடன் சம்பள வியூகமும் இதனூடாக தீர்மானிக்கப்படவுள்ளது. அத்துடன் வாழ்நாளில் ஒருதடவை மட்டுமே வழங்கப்படும் வாழ்க்கை பணிக்கொடை செலவு வழங்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர வர்த்தக வலயத்தில் இயங்கும் பெரும்பாலான நிறுவனங்கள் இப்பணிக்கொடை வழங்கப்படவில்லை.
தொழிலாளர்களுக்கான வருடாந்த சுற்றுலாவிற்கான செலவை நிறுவனம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவ்வொப்பந்தத்தில் குறிப்பிடப்படடுள்ளது. சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள பெரும்பாலான நிறுவன ஊழியரகளுக்கு இவ்வசதி கிடைப்பது மிகவும் அரிதாகவே கிடைக்கிறது.
மேலும் வருடாந்த சம்பளத்தில் 10 வீதமான 13,000 ரூபாவை (88 அமெ. டொ) தொழிலாளர் மற்றும் அவருடைய நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ செலவுக்காக வழங்குதல் மற்றும் 40,000 ரூபா சத்திரசிகிச்னை போன்றவற்றுக்காக 40 000 பெறுமதியான ((268 அமெ. டொ) மருத்துவ காப்புறுதி வழங்குதல் என்பனவும் இவ்வொப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
வேலைத்தளம்